மட்டு மாநகர சபை வரவு செலவுத்திட்ட தயாரிப்பின் இறுதி செயலமர்வு
Posted by Kattankudi Web Community on 15/09/2012
மார்க்கா ஆய்வு நிறுவனம் கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் மட்டக்களப்பு சிவில் சமூக பிரதி நிதிகள் என்பவர்களுடன் இணைந்து மேற்கொண்ட மட்டக்களப்பு மாநகர சபையின் வரவு செலவு திட்டத்தினை வெளிப்படைத்தன்மையடன் தயாரித்தல் தொடர்பிலான இறுதி செயலமர்வு இன்று (15.9.2012)மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதி சிவகீர்த்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ஜ் பிள்ளை, மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கே.சிவநாதன், மார்க்கா ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் அசோக்கா குணவர்த்தன, அதன் இணைப்பாளர் பி.விஜேதிலக உட்பட மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் சிவில் சமூக பிரதி நிதிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது மார்க்கா நிறுவனம் இது தொடர்பில் கடந்த சில மாதங்களாக மட்டக்களப்பு மாநகர சபை வரவு செலவு திட்டம் தயாரித்தல் தொடர்பாக மேற்கொண்டு வந்த செயலமர்வுகள் கள ஆய்வுகள் என்பவற்றை வைத்து இன்றைய செயலமர்வில் கலந்துரையாடப்பட்டன.








