காத்தான்குடியில் வசதியற்ற குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை
Posted by Kattankudi Web Community (KWC) on 14/09/2012
காத்தான்குடி நகர சபையினால் அதன் பிரிவிலுள்ள மலசலகூடம் இல்லாத வசதியற்ற குடும்பங்களுக்கு யு.என்.ஹெபிடட் நிறுவனத்தின் நிதியுதவியுடன் மலசலகூடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இத் திட்டத்தின் கீழ் 33 மல சல கூடங்களை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்த்தினை ஆரம்பித்து வைக்கும் வைபவத்தில் யு.என்.ஹெபிடட் நிறுவனத்தின் தேசிய செயற்திட்ட ஆலோசகர் கலாநிதி பஹ்மி இஸ்மாயில், காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர், பிரதி தலைவர் எம்.எம்.ஜெஸீம் நகர சபை உறுப்பினர் அலி சப்ரி உட்பட முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
காத்தான்குடி நகர சபை பிரிவிலுள்ள புதியகாத்தான்குடி றிஸ்வி நகர், பதுறியா நகர், பிர்தௌஸ் நகர் ஆகிய பகுதிகளில் இந்த மலசலகூடங்கள் அமைக்கப்படவுள்ளன.









fawas said
alhamdu lillah. Entha vithamaana thillumullu nadakkak koodaathu. Insa allah