தேர்தல் தினத்தன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளது
Posted by Kattankudi Web Community (KWC) on 13/09/2012
தேர்தல் தினத்தன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் பதியப்பட்டுள்ளதாக நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் எனப்படும் கபே அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ஏ.எச்.ஏ.ஹுஸைன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனையிலுள்ள வாக்குச் சாவடியொன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி முகவர் ஒருவர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவமும், நாசிவன் தீவு வாக்குச் சாவடியிலுள்ள தமிழரசுக் கட்சியின் முகவர் ஒருவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவமும் கபேயில் பதியப்பட்டுள்ளது.
இதே வேளை வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 14ம் கொலனியிலுள்ள அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலிருந்த வாக்கச் சாவடியில் கடமையாற்றிய அதிகாரி யொருவர் மது போதையில் காணப்பட்ட சம்பவம் ஒன்றும் எமது கபே அமைப்பிடம் பதியப்பட்டுள்ளதாக இணைப்பாளர் ஹுஸைன் தெரிவித்தார்.









PMAMF Mohammed H.I.R.A.Z said
உங்கள் நடவடிக்கை குறித்து தேர்தலில் போட்டி இடும் கட்சிகளில் சில நம்பிக்கை யீனதையும் தாங்கள் பக்க சார்பாக செயட்படுவதாகவும் பகிரங்கமாக தங்கள் கட்சியின் நிலைபாடாக உத்தியோக பூர்வமாக அறிவிதால் தாங்கள் தொடர்தும் பணி செய்வீர்களா? அல்லது மேட்கதேயர் இஸ்டைலில் பணியில் இருந்து விலகிவிடுவீர்களா???