காத்தான்குடி கடற்கரையை நவீனமுறயில் அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடல்
Posted by Kattankudi Web Community (KWC) on 13/09/2012
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரத்திலுள்ள கடற்கரையை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் நேற்று (12.9.2012) பாதுகாப்பு அமைச்சின் கீழுள்ள நகர அபிவிருத்தி திணைக்களத்தில் நடைபெற்றது.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் நகர அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கிரிந்த கொண மற்றும் மேலதிக பணிப்பாளர் பிரிகேடியர் சமந்த மற்றும் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இதன் போது காத்தான்குடி கடற்கரையை நவீனமுறயில் அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு அதற்கான திட்ட வரைபடங்களும் பார்வையிட்டனர்.
பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் இந்த அபிவிருத்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் ஊடக இணைப்பாளர் முகம்மட் சஜி தெரிவித்தார்.
அண்மையில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மட்டக்களப்புக்கு வருகை தந்த போது பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் காத்தான்குடிக்கும் வருகை தந்து காத்தான்குடி கடற்கரையை பார்வையிட்டதுடன் அதன் அபிவிருத்தி தொடர்பான வேலைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.











DEEN FAROOS. JP said
ALHAMTHU LILLAH.
PMAMF Mohammed H.I.R.A.Z said
அவசியம் செய்யவேண்டியவைதான் ஆனால் இதட்கு விலையாக ஊர் சொத்து தேசிய சொத்தாகாமல் இருந்தால் சரி!!! நம் ஊர் கலாசாரம் நம் ஊரிலேயே காற்றில்பறக்கவிடபட்டு பிறகலாசாரங்கள் இந்த அபிவிருத்தி திட்டதின் பிட்பாடு உருவாகாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்!!! அதட்குறிய ஒரே வழி மெத்தை பள்ளிவாசலின் புனித பிரதேச எல்லை ஊரின் நால் புற எல்லை வரையாக விஸ்திகரிப்பதாகும்
kudimahan said
உருப்படியான ஒரு ஆலோசனை….. அவரு செய்ற எல்லாத்துக்கும் தலைய ஆட்டமா இதை இத எல்லா விசயத்திலும் சொல்லுங்க…
PMAMF Mohammed H.I.R.A.Z said
மன்னிகனும் எனக்கும் அவருக்கும் எந்த தொடர்பும் கிடையாது அதனால் உங்கள் ஆலோசனையை நீங்களே வைதுகொள்க
reader said
Yes
Nasar said
Masha allah
iski ahamed said
Masha allah
Mahalir Any said
Penkalukku irukkum Ore Oru Poluthu Poakidame intha Beach than Develop enkira Peril Athaiyum Naasamakkina Penkal anku eppadi Selvathu