அஹதிய்யா பாடசாலைகளுக்கான இறுதிப்பரீட்சை நாளை மறுநாள் கொழும்பில்!
Posted by Kattankudi Web Community on 13/09/2012
இஸ்லாமிய சமயக்கல்வியைப் போதிக்கும் அஹதிய்யா பாடசாலைகளுக்கான இறுதிப் பரீட்சை செப் 15ஆம்திகதி நாளை மறுநாள் கொழும்பில் நடைபெறும். இப்பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்பதாரிகளுக்கு குறித்த பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவனையும் அவர்களின் முகவரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் எப்.எம்.என்.ஜே.புஷ்பகுமார தெரிவித்தார்.
பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவனையும் இது வரை கிடைக்கப் பெறாத விண்ணப்பதாரிகள் தமது பெயர் முகவரிகளுடன் பரீட்சை திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு – வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளையுடன் அல்லது கீழ் குறிப்பிடப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் விண்ணப்பத்தாரிகளை கேட்டுள்ளார்.
தொடர்பு கொள்ள வேண்டிய
தொலைபேசி இலக்கம்: 011-2785230 011-277075
பெக்ஸ் இலக்கம்: 011-278423








