சட்டக்கல்லூரியின் பிரவேசப்பரீட்சை – ஆகஸ்ட் 12 இல்
Posted by Kattankudi Web Community on 24/07/2012
இலங்கை சட்டக்கல்லூரியின் 2013ஆம் கல்வியாண்டுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான போட்டிப் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 12ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.
கொழும்பில் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள இந்தப்பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் குறித்த விண்ணப்பத்தாரிகளுக்கு தற்சமயம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவிக்கின்றது.
இந்த அனுமதிப்பத்திரங்களும் நேர அட்டவணைகளும் கிடைக்கப்பெறாத விண்ணப்பத்தாரிகள் தமது முழுப் பெயர் மற்றும் முகவரிகளுடன் பரீட்சை திணைக்களத்தின் ஒழுங்கமைப்பு -வெளிநாட்டு பரீட்சைக் கிளையுடன் தொடர்பு கொள்ளுமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்.எம்.என்.ஜே.புஷ்பகுமார விண்ணப்பத்தாரிகளைக் கேட்டுக்கொள்கிறார்.
மேலதிக விபரங்கள் தேவைப்படின் பின்வரும் தொலைபேசி மற்றும் பெக்ஸ் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் மேலும் அறிவித்துள்ளார்.
தொலைபேசி இலக்கம் - 011-2785230 011-277075
பெக்ஸ் இலக்கம் – 011-2784232








