ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா
Posted by Kattankudi Web Community on 04/05/2012
காத்தான்குடி ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 03.05.2012 நேற்று இடம்பெற்றது.
வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல்வேறு போட்டி நிகழ்வுகளில் தமது திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களையும் , புலமை பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களும் இதன் போது கௌரவிக்கப்பட்டனர். இதன் போது நகர முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் உட்பட காத்தான்குடி கல்வி அதிகாரி எஸ்.எம்.எம்.சுபைர், ஓய்வுபெற்றஅதிபர் எம்.இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டனர்








