கிழக்கு மாகாண பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாகாண சபையால் கொடுப்பனவு
Posted by Kattankudi Web Community (KWC) on 24/02/2012
வரலாற்றில் முதல்தடவையாக இதுவரை எவ்வித கொடுப்பனவுகளுமின்றி நீண்டகாலமாக கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களைச்சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க மாகாண முதலமைச்சர் சிவசேனத்துரை சந்திரகாந்தனின் பணிப்புரையின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு கிழக்கு மாகாணசபையின் பாலர் பாடசாலைகள் பணியகத்தினால் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர் ரி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பி.பிரசாந்தன் இரா.துரைரட்ணம் மாகாண பாலர் பாடசாலைகள் பணியக தலைவர் என்.நடராசா அம்பாறை மாவட்ட தலைவர்ஏ.எல்.எம்.இப்றாஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 3000 ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளனது.








