புதுக்குடியிருப்பு கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் தற்கொலைக்கு முயற்சி
Posted by Kattankudi Web Community on 23/02/2012
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நேற்று (22.2.2012) இடம் பெற்ற கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் விஷம் அருந்தியதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
புதுக்குடியிருப்பில் நேற்று கொலை செய்யப்பட்ட சின்னத்தம்பி இளைய தம்பி என்பவரின் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியில் வசிக்கும் ராஜரட்னம் எனும் பிரதான சந்தேக நபரை கைது செய்தவுடனேயே அவர் விஷம் அருந்தி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதையடுத்து இப்பிரதான சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இக் கொலை தொடர்பில் நான்கு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







