பிஸ்ஸா ஹட் (Pizza Hut) நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் காலாவதி
Posted by Kattankudi Web Community on 23/02/2012
அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமாவினால் உலகப்பிரசித்தி பெற்ற துரித உணவகமான பிஸ்ஸா ஹட் நிறுவனத்தின் இலங்கையில் இயங்கி வந்த கிளைகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஹலால் சான்றிதழ் காலாவதியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சான்றிதழ் புதுப்பிக்கப்படுவதற்கு எந்த விதமான நடவடிக்கைகளும் குறித்த நிறுவனத்தினால் எடுக்கப்படாததை தொடர்ந்து ஹலால் சான்றிதழ் நடைமுறையில் இல்லை என்பதை ஜம் இய்யத்துல் உலமா உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பின் பிரதி வாசகர்களுக்காக இங்கு பதிவேற்றப்பட்டுள்ளது







