அமைச்சர் பஷில் ராஜபக்ஷவினால் மட்டக்களப்பில் மூன்று மாடிக்கட்டிடம் திறப்பு
Posted by Kattankudi Web Community on 23/02/2012
27 மில்லியன் ரூபா செலவில் மட்டக்களப்பு வின்சனட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட மூன்று மாடிக்கட்டிடம் இன்று (23.2.2012) பொருளாதார அபிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தன் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெவ்வை உட்பட கல்வி அதிகாரிகள் மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர் வலய கல்விப்பணிப்பாளர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திர காந்தனின் வேண்டுகோளின் பேரில் இப்பாடசாலை மூன்று மாடிக்கட்டிடம் பொருளதார அபிவிருத்தி அமைச்சின் நிதியொதுக்கீட்டில் கட்டப்பட்டுள்ளது.
This slideshow requires JavaScript.







