காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடியில் கைக்குண்டுத் தாக்குதல்

Posted by Kattankudi Web Community on 22/02/2012

-நமது செய்தியாளர்-

காத்தான்குடியில் இன்று (22.2.2012) அதிகாலை வீடு ஒன்றின் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் அவ்வீட்டின் முன்பகுதி சிறிய சேதத்துக்குள்ளாகியுள்ளது.

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மாப்பள்ளிவாயல் வீதியிலுள்ள முகம்மது சாஜித் என்பவரின் வீட்டின் மீதே இந்த கைக்குண்டு வீசப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதனால் இவ் வீட்டின் முன் யன்னல் கண்ணாடி மற்றும் கதவு என்பன உடைந்து அங்கு போடப்பட்டிருந்த திரைப்பிடவையும்

எரிந்துள்ளன.இந்த சம்பவம் இடம் பெற்ற போது இங்கு தூக்கத்திலிருந்த எவருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.இது பெற்றோல் குண்டாக இருக்கலாமென சந்தேகிப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

தாறுல் அதர் எனப்படும் இஸ்லாமிய பிரச்சார அமைப்பின் பொருளாளர் ஏ.எல்.எம்.நியாஸ் என்பவரின் சகலனின் வீட்டிலேயே இச்சம்பவம் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

One Response to “காத்தான்குடியில் கைக்குண்டுத் தாக்குதல்”

  1. அலியாரு மொய்தீன் said

    என்னய்யா நடக்குது இந்த ஊர்ல? அவங்க அவங்க தங்கட வேலய தான் உண்டு தன்ட காரியம் உண்டு என்டு பாத்துக்கொண்டிருகேக்குள்ள ஊருக்குள்ள நல்லது?? ………. அட்டகாசங்கள் அளவு மீறிப் போயிட்டிருக்கு…..

    ஊரிலுள்ள முக்கிய நிறுவனங்கள் அமைப்புக்களும் இவற்றையெல்லாம் கண்டுக்கற மாதரியும் தெரியல்ல…

    காத்தான்குடியோட சிறப்பயும் இங்குள்ள சில மக்களுக்கிரிக்கின்ற பண்புகளப்பத்தியும் கடந்த வாரம் நடந்த ஜூம்ஆவுல உரைக்கிற மாதிரி சொல்லிக்காட்டினாரு … மத்தியமாகாணத்தச் சேர்ந்நத ஒரு கதீபு…

    ஆனாலும் யாருக்கும் புத்தி வார மாதிரி தெரியல்ல…

    இந்த மாதிரி கைக்குண்டு தாக்குதல் செய்யுமளவுக்கு எமது ஊர்ல அக்கிரமக்காகர்கள் வளத்து விடப்பட்டிரிக்காங்களா??

    குடும்பப் பிரச்சன முதல்ல கோழிப்பிரச்சன வரைக்கும் அடிதடி பத்தவைக்கிற கலாச்சாரத்த தொடர்ர நம்ம சிர்திருத்த வாதிகள் அடங்கி நடக்குறது எப்ப?

    ஊருக்கென்று இரிக்கின்ற மதிப்பையும் மரியாதையுயும் சீர்குலைக்க இவர்கள் இவ்வாறான விசயங்கள தொடந்தும் செய்றத நம்மட ஊரு பொது அமைப்புகள் பொது நிறுவனங்கள் பொது மக்கள் கட்சி பேதம் பார்க்காம தடுத்து நிறுத்தனும்…

    இல்லாவிட்டால் இவர்களுடைய அட்டகாசங்களால் ஒவ்வொரு தனிமனிதனும் எதிர்காலத்தில் பல பாதிப்புக்களi அவர்கள் மூலமாக எதிர்நோக்க வேண்டிவரும்….

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s