முதியோர்களை கண்ணியப்படுத்தாத பிள்ளைகள் முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, பராமிப்புச் செலுத்த வேண்டும்- ஏ.சி.ஏ.அஸீஸ்
Posted by Kattankudi Web Community on 21/02/2012
முதியவர்களின் உணர்வுகளை மதிக்காமல் அவர்களை ஏளனம் செய்கின்ற ஒரு கூட்டம் எம்மில் இருக்கத்தான் செய்கிறது. முதியவர்கள் சமுகத்தின் முன்னோடிகள், அனுபவங்களின் களஞ்சியம் இதனால்தான் ‘முதியவர் ஒருவர் இறக்கின்ற ஒவ்வொரு வேளையிலும,; ஒரு பெரும் நூலகமே எரிகின்றது’ என்ற முதுமொழி மூலம் இவர்கள் உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர்கள் என்ற வகையில் முதன்மை பெறுகின்றனர் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரி திரு.ஏ.சி.ஏ. அஸீஸ் அவர்கள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் ‘முதியோர் இளையோர்களுக்கிடையில் அன்பை வளர்த்தல்’ எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பயற்சிப் பட்டறை, உதவி மாவட்ட செயலாளர். செல்வி. ஜி.நவருபரஞ்சனி அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு மாநகர மண்டபத்தில் முதியோர் சங்க உறுப்பினர்கள், மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற போது, விரிவுரையாற்றிய அஸீஸ் அவர்கள் மேலும் கருத்துத் தொவிக்கும் போது, சிரேஸ்ட பிரஜைகளுக்கு இப்பருவத்தில் பிரதான தேவையாக ஓய்வு, அன்பு, பராமரிப்பு, சுயமதிப்பு, கௌரவம் என்பது இவர்களின் எதிர்பார்ப்பாகும்.
உலக சனத் தொகை அதிகரிப்புக்கேற்ப முதியோர் தொகையும் துரிதமாக விருத்தியடைந்து வருவதால் அது முழு உலகிற்கும் பெரும் சவாலாக காணப்டுகிறது. குறிப்பாக எமது நாட்டில், 1946ல் ஆயுட்காலம் 46 வயதாக இருந்த கணிப்பீடு தற்போது 60 வயதிற்கும் அதிகமாகச் செல்கின்றது. எதிர்காலத்தில 2050ஆம் ஆண்டளவில் உலகில் மொத்த சனத்தொகையில் முதியோர் தொகை 50 வீதமாக உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் இன்று 2 மில்லியன் முதியவர்கள் வசிப்பதுடன் இது உலகத்தில் ஜப்பான், சிங்கப்பூருக்கு அடுத்ததாக மூன்றாவது இடத்தை வகிக்கின்றது. எமது நாட்டில் சுமார் 80 சத வீதமான சிரேஸ்ட பிரஜைகள் தங்களது பிள்ளைகளுடனும், உறவினர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மேற்கத்தைய நாடுகளை ஒப்பிடுகையில் சுமார் 18 சத வீதமானவர்கள் மட்டுமே தங்கள் பிள்ளைகளுடனும், உறவிவினர்களுடனும் வாழ்ந்து வருவதாக மேற்கத்திய செய்திகள் தெரிவிக்கிறது. எமது நாட்டில் சிரேஸ்ட பிரஜைகளின் அதிகரிப்பால் தேர்தல் வாக்குகளில் இவர்களின் அபிப்பிராயம் அதிகமாக இருக்கி;ன்றது.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் முதியவர்கள் என்னும் போது அவர்கள் வெறுமனே வயதை மட்டும் அடைந்த நிலையில் சமுகத்தில் செல்வமிக்கவர்களாகவும், செல்வாக்கு உடையவர்களாகவும் ஆகிவிடுகின்றனர். ஆனால் எமது நாட்டில். எத்தனையோ முதியவர்கள் பிச்சை எடுப்பவர்களாகவும், அனாதைகளாக கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர். முதியவர்களை ஒரு பொக்கிசமாக கருதப்பட்ட காலத்திலும் பார்க்க தற்போது அவர்களை பெறும் சுமையாகவே சிலர் கருதுகின்றனர். இதன் காரணமாகவே இன்று சிறுவர் இல்லங்கள் அதிகரிப்பது போன்று முதியோர் இல்லங்களும் வௌ;வேறு பெயர்களில் அதிகரித்து வருகின்றது. இளைய தலைமுறையினருக்கும் சிரேஸ்ட பிரஜைகளுக்குமிடையே ஆரோக்கியமான புரிந்துணர்வு, நல்லுறவு என்பன இன்று வெகுவாக குறைந்த நிலையில் காணப்படுகிறது.
ஒரு மரத்திற்கும் வீட்டிற்கும் ஆணிவேரும் அத்திவாரமும் எவ்வளவு அவசியம் என்பது அனைவருக்கும் தெரிவதில்லை. அவை மண்ணுக்குள் மறைந்திருந்தாலும் அவற்றின் பங்களிப்பு இன்றியமையாதது. இதேபோன்றே எம் மூதாதேயரான முதியவர்களின் அனுபவம். அறிவு, பங்களிப்பு என்பன சமூகத்திற்கு அவசியமாகின்றது.
ஏழ்மையில் காலத்தைக் கழிக்கின்ற சிரேஸ்ட பிரஜைகளின் பாதுகாப்பினையும். நலனையும் உறுதிப்படுத்துவதற்காகவும், உதாசீனப்படுத்தும் பிள்ளைகளிடமிருந்து அடிப்படை வசதிகளைப் பெற்றுக் கொள்வதறகாகவும்; இலங்கை பாராளுமன்றமானது 2000ம் ஆண்டின் 9ம் இலக்க முதியோர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு;ள்ளது.
இச்சட்டத்தின் மூலம் முதியவர் என்பவர் 60 வயதை பூர்த்தி செய்தவர் என பொருள் கோடல் செய்கிறது. முதியவர் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகள் வகுப்பதற்கும,; முதியோருக்கு உதவுவதற்கும் முதியோhகளுக்கான தேசிய பேரவை ஸ்தாபிக்கப்பட்டு;ள்ளது. பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களைப் பராமரிக்கத் தவறுகின்ற போது அவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்து பராமரிப்புத் தொகையினை சட்டரீதியாக பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி அவர்கள் விசாரணை செய்த பின்னர் நிர்ணய சபை பொருத்தமான தொகையொன்றை தாபரிப்பாக செலுத்த வேண்டுமென பிள்ளைகளுக்கு கட்டளையிடும். இக்கட்டளையினை, அவர்கள்; நிறைவேற்றப்படாதவிடத்து அதனை அமுலாக்கம் செய்யவென, அப் பிரதேசத்தின் நியாயாதிக்கமுள்ள நீதவான் நீதிமன்றத்திற்கு கோரப்படும்;. இதன் மூலம் அத்தொகையானது நீதவான் நீதிமன்றம் மூலம் அறவிட்டு;க் கொடுக்கப்படும். பிரதிவாதிகளான பிள்ளைகள் அத்தொகையினை செலுத்தத் தவறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக தண்டப்பணமும், சிறை அல்லது இரண்டும் வழங்க முடியும் எனவும் அதிகாரி அஸீஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.






