குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் முப்பெரும் நிகழ்வுகள்!
Posted by Kattankudi Web Community (KWC) on 21/02/2012
குவைத் தேசிய தின விடுமுறையை முன்னிட்டு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்யும் துறை சார்ந்த அறிஞர்களால் நடத்தப்படும் முப்பெரும் நிகழ்வுகள்!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த ஏழு வருடங்களாக குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், குவைத் தேசிய தின விடுமுறையை முன்னிட்டு வருகின்ற 24.02.2012 வெள்ளிக்கிழமை அன்று துறை சார்ந்த அறிஞர்களால் நடத்தப்படும் முப்பெரும் நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது இன்ஷா அல்லாஹ்…
நாள்: 24.02.2012 வெள்ளிக்கிழமை
நேரம்: அந்திமாலை 6:00 மணி முதல் மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து…
இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசல், ஃபர்வானிய்யா கிரவுன் பிளாஸா ஹோட்டல் எதிரில், ஏர்போர்ட் (55ம் எண்) சாலையும், 6வது சுற்றுச் சாலையும் இணையும் பாலத்திற்கு அருகில், ஃகைத்தான், குவைத்.
நிகழ்வு 1:
- திருக்குர்ஆனை திருத்தமாக ஓத… ஓதுவோம் வாருங்கள்!
நிகழ்வு 2:
- வாங்க… பேசிப் பழகலாம்…! ஓர் எளிய மேடைப்பேச்சு பயிற்சி!
நிகழ்வு 3:
- சிறப்புப் பேச்சுப் போட்டி
- தலைப்பு: என்னைக் கவர்ந்த பெருமானார் (ஸல்)
நிபந்தனைகள்:
- வயது, நாடு, மத வேறுபாடின்றி ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம்.
- 8 முதல் 10 நிமிடங்கள், தமிழ் மொழியில் தலைப்பை ஒட்டியே பேச்சு அமைய வேண்டும்.
- நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
குறிப்பு:
- பேச்சுப் போட்டியில் சிறப்பாக பேசுவோருக்கு பரிசுகளும், போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
- பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
குவைத் வாழ் தமிழ் பேசும் அனைவரும் வருக… அன்பர்களையும் அழைத்து வருக… அளவிலா அறிவமுதல் பெறுக…
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து இணைப்பைப் பார்வையிடவும்.
நிகழ்ச்சியின் முழு விபரங்கள் இத்துடன் இணைக்கபட்டுள்ளன.








