கட்டார் அகடமி பிரதிநிதிகள் ஏறாவூருக்கு விஜயம்
Posted by Kattankudi Web Community on 21/02/2012
கட்டார் அகடமி பிரதிநிதிகள் குழுவொன்று நேற்று (20.2.2012) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பகுதிக்கு விஜயம் செய்தனர்.
ஏறாவூர் கல்வி அபிவிருத்தி நிலையத்தின் அழைப்பில் ஏறாவூருக்கு விஜயம் செய்த இவர்கள் ஏறாவூர் நகர சபைத்தலைவர் அலிசாஹீர் மௌலானாவை ஏறாவூர் நகர சபை அலுவலகத்தில் வைத்து சந்தித்தனர்.
இதன் போது ஏறாவூரில் மாதிரி சந்தைக்கட்டிடம் மற்றும் பொது நூலகம் கணணி பயற்சி கூடம் என்பவற்றை நிர்மானித்து தருமாறு ஏறாவூர் நகர சபை தலைவர் அலிசாஹீர் மௌலானா கட்டார் அகடமி பிரதி நிதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் போது ஏறாவூர் நகர சபை உறுப்பினர்கள் ஏறாவூர் கல்வி அபிவிருத்திச் சங்கத்தின் பிரதி நிதிகள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
ஸ்டிபன் பெர்ணாண்டோ தலைமையில் இங்கு விஜயம் செய்த கட்டார் அகடமி குழுவினர் ஏறாவூரிலுள்ள அலிகார் தேசிய பாடசாலை மற்றும் மிச்சி நகர் அரசினர் கலவன் பாடசாலை, ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையம், எறாவூர் விஷேட தேவையுடையோர் பாடசாலை ஆகியவற்றுக்கு லப்டொப் கணணிகளையும் வழங்கி வைத்தனர்.
இதே போன்று இவர்கள் தாமரைக்கேனியிலுள்ள குடியேற்ற கிராம மக்களுக்கு 3500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்களையும் வழங்கி வைத்ததுடன் பாலர்பாடசாலை ஆசிரியைகளுக்கான பயிற்சி செயலமர்வொன்றை நடாத்தினர்.
இவர்கள் ஏறாவூரிலுள்ள பல்வேறு முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
ஏறாவூர் கல்வி அபிவிருத்தி சபையின் தலைவர் எம்.அன்சார் மற்றும் அதன் முக்கியஸ்தரும் ஏறாவூர் நகர சபை உறுப்பினருமான எம்.பெறோஸ் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
This slideshow requires JavaScript.







