இன்போவின் கௌரவம்- மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹிர் (CEB)
Posted by Kattankudi Web Community on 21/02/2012
காத்தான்குடி இன்போ இணையத்தளமானது இன்போவின் கௌரவம் எனும் நிகழ்வினூடாக நமதூரின் முக்கிய அதிதிகளையும் மற்றும் மக்கள் சேவை செய்யும் உயர் அதிகாரிகளையும் நேரடியாக சந்தித்து செவ்வி காணுவதன் மூலம் அவர்கள் தொடர்பிலான தகவல்களை வழங்குவதோடு மக்கள் சேவையில் பொதுமக்களுக்கு எழும் சந்தேகங்களையும் அவர்கள் மூலமாக நிவர்த்தி செய்ய முயற்சித்து வருகின்றது.
அந்த வரிசையில் இம்முறை இலங்கை மின்சார சபையின் காத்தான்குடி மின் பாவனையாளர் சேவை நிலையத்தில் மிக நீண்ட காலமாக (15 வருடங்கள் ) கடமை புரியும் மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹிர் (NDT, Dip.In.Management) அவர்களின் நேரடி பேட்டி மற்றும் அவர் தொடர்பிலான ஏனைய தகவல்கள் இடம்பெறுகின்றன. இந்த சந்திப்பின் மூலம் மின்சாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு இருக்கும் சந்தேகங்கள் மற்றும் அது தொடர்பிலான பிரச்சினைகள் மற்றும் மிக அண்மையில் மின் கட்டணங்களில் ஏற்பட்ட மாற்றங்கள் போன்றவை இங்கு எமது அதிதியுடன் ஆராயப்படுகின்றது.
மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹிர்(NDT, Dip.In.Management)- ஒரு பார்வை
பெயர்: ஏ.எல்.மாஹிர்
தாய்: ஏ.ஆசியா உம்மா
தந்தை: எம்.ஐ.அப்துல் லத்தீப்
பிறந்தது: 1969-11-05
உடன்பிறப்புகள்: சகோதரர்-2, சகோதரி-1
பாடசாலை : மட்/அல் அமீன் வித்தியாலயம், காத்தான்குடி மத்திய கல்லூரி
உயர்கல்வி: மொரட்டுவ பல்கலைக்கழகம்
கல்வித்தகைமைகள்: National Diploma In Technology (Moratuwa University), Dip.In.Management (NIBM)
திருமணம்:1996 இல், பிள்ளைகள்- 03, ஆண் -02, பெண் -01
தொழில் வாழ்க்கை: Inspector Of TELECOM- SRILANKA TELECOM (1995-1997), Electrical Superintendent – CEB (1997-To Date)
பொது வாழ்க்கை: நிருவாக சபை உறுப்பினர்-அஷ்-செய்யிது செயின் மௌலானா பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை
மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹிர்(NDT, Dip.In.Management) அவர்களை எமது நிருவாக உறுப்பினர் பொறியியலாளர் ALM.றிசாத் B.Sc.Eng(Hons) அவர்கள் நேர்கண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் கீழே
மின் அத்தியட்சகர் ஏ.எல்.மாஹிர்(NDT, Dip.In.Management) அவர்கள் எமது இன்போவிற்கு வழங்கிய நேரடி பேட்டியின் காணொளிகள் ஐந்து பகுதிகளாக கீழே வழங்கப்படுகின்றது.
பகுதி-1
பகுதி-2
பகுதி-3
பகுதி-4
பகுதி-5









Niyas said
Well done Info,
thanks AL.Mahir Sir for your valuable information which are very useful to our people
Fazil said
i wish Mahir ES to continue his services to kattankudy
Haroon.MT said
இவரது சேவை தொடர வாழ்த்துக்கள், இவர் சொல்லும் அறிவுரைகள் மிக பெறுமதியானவை. இவ்வாறு நமது சமூகத்தை சேர்ந்தவர்கள் இவ்வாறான பொறுப்புகளில் இருப்பது சிறந்த விடயமாகும்.
Noor Mohamed said
பொதுமக்களோடு மிக சிறப்பாக பழகுகின்ற ஏ.எல்.மாஹிர் போன்ற அதிகாரிகள் நம் சமூகத்திற்கு மேலும் தேவை. இவரது பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
அலியாரு மொய்தீன் said
சந்தோசம் மன… உன்ன மாதிரி ஆக்கள் கொஞ்சப் பேரு நம்ம ஊர்ல இரிக்கிறதனாடித்தான் அரச சேவைகள் கொஞ்சம் நல்லாப் போய்கிட்டிருக்கு… சுயநலமில்லாம நேர்மையாவும் நியாயமாவும் அல்லாஹ் தந்த நிஃமத்துக்கள பயன்படுத்துறவகளுக்கு அல்லாஹ்ட பரக்கத்து என்டைக்கும் இரிக்கி…
உன்ன மாதிரி நல்ல புள்ளைகள் படிச்சி நல்ல விசயங்கள் இந்த ஊருக்கு செய்றதுக்கு ஆண்டவனுக்கு நான் நன்றி செய்றத்தோட இன்னம் இன்னம் உங்கட அறிவையும் சதுர ஆரோக்கியத்தையும் எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்கனும் என்டு துஆச் செய்றம் மன……