12 புதிய மீடியா அப்ளிகேஷன்களை வெளியிட்ட பேஸ்புக்!
Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012
சோஷியல் மீடியாவான பேஸ்புக்கின் புதுமைகள் எல்லை கடந்து போய் கொண்டு இருக்கிறது. 12 புதிய மீடியா ஆப்ளிகேஷன்களை உருவாக்கி உள்ளது பேஸ்புக். காதலர் தினத்தை முன்னிட்டு 60 புதிய அப்ளிகேஷன்களை கொடுத்து அசத்திய பேஸ்புக் இப்போது மீண்டும் 12 புதிய அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்துள்ளது.
ஏற்கனவே இளைஞர்கள் முதல் கொண்டு அனைவரது கவனத்தையும் திருப்பிய பேஸ்புக் டைம்லைன், இதை நிலைநிறுத்தி கொள்ள புதிய அப்ளிகேஷன்களை உருவாக்கிய வண்ணம் இருக்கிறது. இந்த புதிய அப்ளிகேஷன்கள் பேஸ்புக்கை பயன்படுத்துபவர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு பெறும் என்று பேஸ்புக்கின் மீடியா விவகாரத் துறை இயக்குனர் ஜஸ்டின் ஒசோப்ஸ்கை கூறியுள்ளார்.
பஸ்ஃபீடு, தி டெய்லி ஷோ, கெட்குளூ, ஹஃபிங்டன் போஸ்டு, மேஷபில், எம்எஸ்என்பிசி.காம், எம்டிவி நியூஸ், பிக்ஸபில், ஸ்போர்டிங் நியூஸ், டுடே ஷோ, சிபிஎஸ் லோக்கல்: லாஸ் ஏன்ஜல்ஸ் அண்டு நியூயார்க் போன்ற ஆன்லைன் சைட்களின் மீடியா அப்ளிகேஷன்களை வழங்க உள்ளது பேஸ்புக். இந்த ஆப்ஸ் வசதிகளை பேஸ்புக்கின் டைம்லைனில் பெற முடியும்.
Courtesy: Gizbot






