காத்தான்குடி முன்மாதிரிப் பெண்கள் – தோணா கால்வாய் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம்
Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012
காத்தான்குடி ஜன்னத் பள்ளிவாயல் மற்றும் நூராணியா பாலர் பாடசாலை பகுதிகளில் உள்ள தோணா கால்வாயில் காணப்படும் ஆற்றுவாளை அகற்றப்பட்டுவருகின்றன.
காத்தான்குடி பிரதேச செயலாளர் மற்றும் பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களின் டெங்கு ஆட்கொல்லி அபாய அறிவுறுத்தலுக்கமைய பொதுமக்களினால் நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் தமது சுற்றுச்சூழலை சுத்தப்படுத்தி வருகின்றனர்.
புதிய காத்தான்குடி 162, 162ஏ, 167டீ கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் முதற்கட்டமாக இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சமுர்த்தி பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.









