காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் நிகழ்வு
Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அதிகரித்த எரிபொருள் விலையேற்றத்திற்கு மத்தியில் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மாதாந்த மானிய மண்ணெண்ணெய் முத்திரைகளை அரசாங்கம் வழங்கிவருகின்றது.
காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் மின்சார வசதியற்ற குடும்பங்களுக்கு மாதாந்த மானிய மண்ணெண்ணெய் முத்திரை வழங்கும் நிகழ்வு நேற்று காத்தான்குடி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், மாகாணசபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், சமுர்த்தி முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.








