இன்றைய வட்டி ஒழிப்பு மாநாடு (படம் இணைப்பு)
Posted by Kattankudi Web Community (KWC) on 20/02/2012
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா ஆகியன இணைந்து வட்டி ஒழிப்பு மாநாடு ஒன்றினை இன்று திங்கட்கிழமை (20.02.2012) காத்தான்குடியில் நடாத்தியது.
காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜம்இயத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய செய்குல் பலாஹ் எம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களும் உலமாக்களும், பள்ளிவாயல் நிருவாகிகள், சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இஸ்லாத்தின் பார்வையில் வட்டியும் அது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கமும் எனும் தலைப்பில் அஷ்ஷெய்க் எம்.ஐ.அப்துல் கபூர் மதனி அவர்களும், நடைமுறையிலுள்ள வட்டியோடு தொடர்பான வியாபார முறைகள் எனும் தலைப்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பீடாதிபதி அஷ்ஷெய்க் ஏ.எம்.அலியார் றியாதி எம்.ஏ. அவர்களினாலும் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டது.














shuhail said
Where we can get the audio record of the above speach
shiham said
ella pamara makkalalukkum chanradaiy wandom