காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடியில் வட்டியொழிப்பு மாநாடு

Posted by Kattankudi Web Community (KWC) on 19/02/2012

- எம். ஏ. சீ. எம். ஜெலீஸ் -

எமது பகுதி வியாபார முறைகளில் அதிகளவு வட்டி தொடர்புபட்டு காணப்படுவதால் நாளுக்கு நாள் பலர் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்கும் நிலை அல்லது தலைமறைவாகும் நிலை அதிகரித்துச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

இஸ்லாம் வட்டியை ‘அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் போராடும் செயலாகவும்’, ‘வட்டியிலீடுபடும் ஒருவர் தன்னைப்பெற்ற தாயோடு 33 தடவைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவதற்கு சமமான பாவமாகவும்’ சுட்டிக்காட்டுவதிலிருந்தே இக்கொடிய வட்டியின் பாரதூரம் எப்படிப்பட்டது என்பதனை உணர்ந்துகொள்ளமுடியும்.

வட்டியிலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில்   சம்மேளனமும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவும் இணைந்து ஒரு மாநாட்டினை எதிர்வரும் 20.02.2012 திங்கட்கிழமை காலை 9:00 மணிமுதல் ழுஹர் தொழுகை வரை சம்மேளனத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவருகின்றன.

6 Responses to “காத்தான்குடியில் வட்டியொழிப்பு மாநாடு”

  1. BADOOD said

    ALHAMDULILLAH

  2. sabry basheer said

    மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி, இந்த முயற்சி வெற்றியளித்து எமது சமுதாயம் வட்டில் இருந்து முற்றாக விலக்கப்பட்ட சமூகமமாக மாற எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. எமதூரைப் பொறுத்தவரை பல வகைகளில் (பெயர்களில்) இந்த வட்டி வியாபித்திருந்தாலும் அதிகமான மக்கள் வங்கிகளில் நகை அடகு வைப்பதிலேயே நேரடியாக வட்டியுடன் தொடர்புடையவர்களாக மாறுவதுடன் அதிலிருந்து நீண்ட காலத்துக்கு விடுபடமுடியாமலும் தவிக்கின்றனர். இதிலிருந்து அதிகமான மக்களை விடுவிக்க எனக்குத் தோன்றும் யோசனையை இங்கு முன்வைக்கின்றேன். நகை அடகு வைப்பதை பொறுத்த மட்டில் அதிகமான மக்கள் தங்களது தங்க நகையின் ஒரு பவுணுக்கான பெறுமதியிலும் அரைவாசிக்கும் குறைவான தொகையையே வங்கிகளில் இருந்து கடனாக பெறுகின்றனர். அவ்வாறு கடனாகப் பெறும் பணத்துக்கு மாதாந்தம் வட்டியை திரும்பச் செலுத்துவதற்கு கூட சிரமப் படும் மக்கள் அந்த நகைகளை மீட்டெடுக்க முடியாத நிலையே இன்று அதிகம், நான் சொல்ல வருவது ஊரில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அல்லது ப.மு.நி.சம்மேளனம் போன்ற முக்கிய நிறுவனங்கள் அவர்களை ஒருங்கிணைத்து இவ்வாறு வங்கிகளில் தங்களது பெறுமதியான நகைகளுக்கு சிறு தொகை கடனைப் பெற்று அதை மீளச் செலுத்தி தங்களது நகைகளை மீட்டெடுக்கச் சிரமப் படும் மக்களை தொடர்பு கொண்டு (வங்கிகள் மூலம் தகவல் பெற்று) அந்த நகைகளுக்கான கடனையும் வட்டியையும் மேற்ப்படி நகை கடை உரிமையாளர்கள் செலுத்திவிட்டு அதற்குரிய (தாங்கள் செலுத்திய கடன் மற்றும் வட்டிக்குரிய பெறுமதியான) தங்க நகைகளை அவர்கள் பெற்றுக் கொண்டு மிகுதியான நகைகளையோ அல்லது அதற்க்கான பணத்தையோ உரியவர்களிடம் ஒப்படைக்கும் பொது இன்ஷா அல்லாஹ் இந்த கொடிய வட்டியில் இருந்து அதிகமான மக்கள் பாதுகாக்கப் படலாம். எண்கள் நல்ல எண்ணங்களை இறைவன் பொருந்திக்கொள்ளட்டும்.

  3. Aliyar Mohideen said

    ஆஹா…. நல்ல சமாச்சாரம்… அல்ஹம்துலில்லாஹ்…..

    கண்ணாளைக்கு புறவு இப்புடியான ஒரு ஏற்பாட்டச் செய்த ஜம்மியதுலமாவுக்கு ரொம்ப நன்றி……

    நம்ம ஊருல யாரும் கேக்க பாக்க இல்லாதஅளவுக்கு இந்த வட்டி குட்டி போட்டு வளந்துகிடக்கு வேற வேற பெயருகள்ல……

    நாமலுந்தான் இந்தப் பாவத்தச் செய்யிறம் மத்தவன தட்டிக்கேக்குற எப்புடியென்டு பலப்பேரு மௌனமாவேற இரிக்காக…… இதனோட அரும பெரும வெளங்குனவகதான் இவக….

    அல்லாஹ்வோட போர் புரியிற அதிகமானவக அதிகரிச்சுள்ள நம்ம ஊருல இந்த வட்டியெங்குற பாவத்த தடுத்து நிறுத்த முன்வாரது குறைய…

    சீதனம், வட்டி.. இந்த ரெண்டு விசயத்த பத்தியும் மக்களுக்கு எச்சரிக்க பண்ணி அந்த பாவத்துல இருந்து மக்கள காப்பாத்துறத்துக்கு மௌலவிமாரு கூட முன்னுக்கு வந்தது வாரது குறைய…. ஆனா இப்ப இப்புடி முன்னுக்கு வந்திருக்கிற ஜம்மியதுலமாவுக்குத்தான் நன்றி சொல்லனும்…

  4. mufeeth said

    indda thideer ganoadayam yaen?panakkararalukku pirachchinai varayua?

  5. Jaufar Mohd. Haneefa said

    Good thought…..

  6. Naswath said

    அஸ்ஸலாமு அலைக்கும்,
    இந்த வட்டிக்கு மூல காரணமாக இருப்பது சீதனமே,
    வட்டியைப் பற்றி எல்லாப் பள்ளி வாயல்களிலும் பிரச்சாரம் செய்யப்படுகிறது.ஆனால் சீதனத்தைப் பற்றி பாரிய அளவில் இப்படி சொல்லப்படுவதில்லையே!,
    அது ஏன்?
    வருமானம் நின்று விடும் என்று பள்ளிவாயல்கள் எல்லாப் பயப்படுகின்றனவா?
    கிழக்கு மாகாணத்திலேயே இந்த சீதனம் என்னும் பாரிய கொடுமை இது ஒரு பாவம் என்று மக்கள் மனதில் சிறிதளவும் பயம் இல்லாமல் நடப்பதற்கு என்ன காரணம்? மக்கள் மத்தியில் அதனுடைய தாக்கம் பற்றி எடுத்து சொல்லாததுதானே? இதற்கு யார் காரணம். படித்த உலமாக்களே இதற்கு மூல காரணமாக இருக்கிறார்கள். மக்களுக்கு முன்மதிரியாக இருக்க வேண்டிய அவர்களே சீதனத்தை வாங்குவதுதானே இதற்கு காரணம். இந்த வட்டியை ஒளிப்பதற்கு பாடுபடுவதைக் காட்டிலும் சீதனத்திற்கு பாடுபட வேண்டும். எல்லாப் பள்ளிவாசல்களிலும் சீதனத்தைப் பற்றி பிரச்சாரம் செய்யப்பட வேண்டும். இந்த சீதனம் என்ற பாரிய நோய் இருப்பதால்தான் பொத்துவில் தொடக்கம் காத்தான்குடி வரை பலவகைப்பட்ட வங்கிகள் ஆரம்பிக்கட்டு பல வழிகளிலும் வட்டிக்கு வழிகாட்டுகிறது. முதல் முதலாக ஒரு முஸ்லிம் கிராமமாகிய காத்தான்குடியில் முதியோர் இல்லம் திறப்பதற்கு ஆணிவேராக இருந்ததும் இந்த சீதனமே! இளைஞர்களே சிந்தியுங்கள். வருங்கால நமது சமுதாயத்தை சீதனமும் வட்டியும் அற்ற சமுமாயமாக மாற்றுவோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s