காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

இவ்வருடம் ஹஜ்ஜுக்கு செல்வோர் முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வேண்டும்

Posted by Kattankudi Web Community on 18/02/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஹஜ் குழுக் கூட்டம் நேற்று சம்மேளன தலைவர் எம்.ஐ.எம்.சுபைர் தலைமையில் சம்மேளன சபா மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்வருடம் ஹஜ் கடமைக்கு செல்வோர் தம்மை முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் மீளப் பெற்றுக் கொள்ளக் கூடிய 25000.00ரூபா முற்பணம் செலுத்தி தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு ஹஜ் குழுவின் தலைவரும் அமைச்சருமான ஏ.எச்.எம்.பௌசி வேண்டுகோள் விடுத்துள்ளதால் சம்மேளனத்தினூடாக இம்முறை ஹஜ்ஜு செய்வதற்கு முடிவெடுத்துள்ளவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையின் பின் சம்மேளன காரியாலயத்தில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு சம்மேளன ஹஜ் ட்ரவல்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இவ்வருடம் சவூதி ஹஜ் அமைச்சு இலங்கைக்கு 2800 பேருக்கு மாத்திரமே ஹஜ் கோட்டா வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கடந்த வருடம் சம்மேளன ஹஜ் ட்ரவல்ஸ் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியில் இருந்து இவ்வருடம் குர்ஆன் மதரஸாக்கல் அபிவிருத்திச் சபைக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு சமூகப்பனணிகளுக்கு இதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளை சம்மேளனம் பயன்படுத்தி வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s