SRD ஏற்பாட்டில் நிபுணத்துவ வைத்திய ஆலோசனை – கேள்வி பதில் நிகழ்ச்சி
Posted by Kattankudi Web Community on 17/02/2012
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்கின்றோம். கிடைக்கின்ற மிகப் பெரிய செல்வம் ஆரோக்கியமாக வாழ்வதே ஆகும். நோயின்றி வாழ்வது அல்லது அது எம்மை ஆட்கொள்ளாது வாழ்வது என்பது மிகப் பெரிய வாழ்க்கை கலைகளில் ஒன்றாகும்.
தனி மனித, குடும்ப அல்லது சமூக கட்டமைப்பில் வாழும் போது ஏற்படும் பல்வேறான காரணிகள் எம்மை இலகுவில் நோயாளியாக்கி விடுகின்றது. எவ்வளவுதான் பணம் சம்பாதித்திருந்தாலும் அல்லது அறிவாளியகவோ பலசாலியகவோ இருந்தாலும் கூட நோய்களை எதிர்த்து போராடுவதில் நாம் தோற்று போய் விடுகிறோம் .இவை சார்பான திட்டமிடல் அல்லது அறிவீனமே இவற்றிக்கெல்லாம் காரணமாகும்.
அரச, தனியார் வைத்தியசாலைகளில் அதிக பணத்தையும் நேரத்தையும் செலவிடுன்ற ஒரு சமூகமாக எமது சமூகம் மாறி விட்டது. அதிக வைத்தியர்களையும் துறை சார் நிபுணர்களையும் உருவாக்க வேண்டும் என எண்ணுகின்ற நாம் எமது சமூகத்தில் நோய்கள் வராமல் இருப்பதற்கான வழி முறைகளையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த தவறி விடுகின்றோம் அல்லது அதற்காக குறைவாக நேரத்தை செல விடுகின்றோம்.
இது இவ்வாறு இருக்கையில்இஒரு சமூகத்தின் எழுச்சியிலும் வீழ்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாதது.பெண்கள் சமூகத்தின் கண்கள் என்போம். மிகக் கூடுதலான குடும்ப பெண்கள் அதிகமான நோய்களுக்கு இளவயதிலேயே உட்படுகின்றனர்.நோய்கள சம்பந்தமான சரியான அறிவூட்டலும் வழிகாட்டலும் உரிய நேரத்தில் கிடைக்காமை இதற்கான முக்கிய காரணமாகும். இது உளஇஉடல் நலத்திக்கும்இவிளைவாக குடும்ப வாழ்விக்கும் வேட்டு வைக்கின்றது
இவ்வாறான சூழலில் ஆரோக்கிய வாழ்வுஇநலமான சூழல் போன்ற கருத்துகள் பலராலும் முன்வைக்கப்படுகின்றன. இந்த பின்புலத்தில் ஆரோக்கியமான சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் திட்டத்தை ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான சமூகம்(SRD)முன்னெடுக்க தயாராகின்றது. பல்துறைகளிலும் உள்ளவர்களை உள்வாங்கி இயங்கும் ளுசுனுஆனதுஇது சார்பாக பல கலந்துரையாடல்களை நடாத்தியதன் பின்னர் மக்களுக்கு தொடர்ச்சியான Heath Awareness and Promotion Program களை நடாத்த இருக்கின்றது
பல துறைகளை சேர்ந்த வைத்திய நிபுணர்களை கொண்டு வந்து மக்களுக்கு தொடர்ச்சியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவர்களுக்குள்ள சகல பிரச்சினைகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு வழங்குவதும் அவற்றினை நேரடியாக வைத்தியரிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் சூழலை உருவாக்குவதுமாகும். இதனை நிபுணத்துவ வைத்திய ஆலோசனை கேள்வி பதில் எனும் எனும் அமைப்பில் செய்யப்பட உள்ளது.
எமது எதிர்கால சந்ததியினரின் கல்வி சுகாதார மேம்பாட்டு நிதிக்காக ஏற்பாடு செய்யபட்டுள்ள இம் முதல் நிகழ்வில் SRDஅமைப்பின் உறுப்பினரும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணரும் சமூக ஆர்வலருமான Dr.சிராஜ் அவர்கள் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளுக்கு நேரடியாக விடையளிக்க உள்ளார்.
தலைப்பு: மாதவிடாய் பிரச்சினைகளும் தீர்வும்
காலம்: 25-02-2012
நேரம்: காலை09-நண்பகல் 01மணி வரை
இடம்: ஹிஸ்புல்லாஹ் மண்டபம்
இந்த நிகழ்வில் உங்களது மேற்படி தலைப்பு சார்பான அனைத்து சந்தேகங்களையும் கேள்விகளையும் நேரடியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ வைத்தியரிடம் கேட்டு பெற்று கொள்ளுங்கள்.
இவ்வாறான தொடர்ச்சியான நிகழ்வுகள் ஊடாக எமது சமூகத்தை எதிகாலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என்பது எமது நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.
இந்நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அதற்கான நுழைவு சீட்டினை பின்வரும் இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
- Ideal Pharmacy, Main Road, Kattankudi
- Central Pharmacy, Beach Road,Kattankudi
- YLM Hotel,Bathuriya Road, Kattankudi
- Paradise Bakery, Old Road, Kattankudi
- ZiyaNet,Main Road,Kattankudi






