மஸ்ஜிது குலபா உர் ராசிதீனில் ஹிப்ழு வகுப்பு ஆரம்பம்
Posted by Kattankudi Web Community (KWC) on 13/02/2012
காத்தான்குடி மஸ்ஜிது குலபா உர் ராசிதீன் அல்குர்ஆன் மத்ரஸாவின் அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் ஹிப்ழு வகுப்பு ஆரம்ப நிகழ்வுகள் நேற்று மாலை மஸ்ஜிது குலபா உர் ராசிதீன் பள்ளிவாயலில் இடம்பெற்றது.
மஸ்ஜிது குலபா உர் ராசிதீன் பள்ளிவாயலின் தலைவர் ஏ.எல்.பதுர்தீன் தலைடையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக சங்கைக்குரிய ஷெய்ஹுல் பலாஹ் மௌலவி ஏம்.ஏ.அப்துல்லாஹ் றஹ்மானி அவர்களும், சிறுவர் அபிவிருத்தி மகளிர் விவகார பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் உட்பட நகரசபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மௌலவி ஏ.எம்.அப்தல் காதர் பலாஹி, மௌலவி ஏ.எல். ஆதம்லெப்பை பலாஹி, மௌலவி ஏ.ஜீ.எம்.அமீன் பலாஹி ஆகியோரும் ஜமாஅத்தார்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மௌலவி எம்.ஐ.அப்துல் கபூர் மதனி அவர்களால் விஷேட உரையும் நிகழ்த்தப்பட்டது.
அதிதிகளால் அல்குர்ஆன் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் ஷெய்ஹுல் பலாஹ் அவர்களால் ஹிப்ழு வகுப்பும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
போட்டோவினை பெரிதாக்கிப் பார்க்க போட்டோவின் மீது கிளிக் (click) பண்ணவும்
















