நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூல விசேட அமர்வு ஒத்திவைப்பு
Posted by Kattankudi Web Community on 13/02/2012
எதிர்பார்க்கப் பட்டது போன்று இன்று கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரத்தை பெற ‘நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம்’ சமர்பிக்கப் பட்டபோதும் சபை உறுபினர்களின் கடுமையான எதிர்ப்பை அடுத்து குறித்த விசேட அமர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் குழப்ப நிலையையடுத்து கிழக்கு மாகாண சபையின் இன்றைய தினம் இடம்பெற்ற நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் விசேட அமர்வு பெப்ரவரி 28ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட குறித்த திருத்தச் சட்டமூலம் சட்டவிரோதமானது என தெரிவித்து சபைக்கு வருகை தந்த பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்த்ததை தொடர்ந்து. சபை அமர்வு 10 நிமிடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு பின்னர் முதலமைச்சர் சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு இணங்க சபை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் அறிவித்துள்ளார் .
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகிய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் சட்டமூலத்தை கடுமையாக எதிர்த்துள்ளனர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது .
நன்றி-லங்கா முஸ்லிம்






