சுதேச வைத்திய அமைச்சினால் மட்டக்களப்பில் மூன்று நாள் மூலிகை கண்காட்சி ஆரம்பம்
Posted by Kattankudi Web Community on 13/02/2012
சுதேச வைத்தியத்துறை அமைச்சின் அனுசரணையுடன் பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மூன்று நாட்களைக்கொண்ட பாரிய மூலிகை கண்காட்சி நேற்று காலை மட்டக்களப்பு செல்வநாயகம் மண்டபத்தில் ஆரம்பமாகியது.
பாரம்பரிய கைத்தொழில் அமைச்சின் தேசிய இணைப்பாளர் தங்கேஸ்வரி கதிராமன் தலைமையில் ஆரம்பமான கண்காட்சியில் பிரதம அதிதிகளாக சுதேச வைத்தியத்துறை அமைச்சர் சாலிந்த திஸாநாயக்கா பாரம்பரிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாநகர மேயர் திருமதரி சிவகீதர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ள இக்கண்காட்சி சீலாமுனை அவிருத்தி சங்கத்தின் தலைவர் டாக்டர் மூலிகை வேந்தன் கே.கண்ணனின் வழிகாட்டலில் இடம் பெறுவது குறிப்படத்தக்கது.
குறித்த கண்காட்சி எதிர்வரும் புதன்கிழமை நிறைபெறவுள்ளமை குறிப்படத்தக்கது.







