காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடி இன்போ செய்திகள் மற்றும் வாசகர் ஆக்கங்களைக் கோருகிறது

Posted by Kattankudi Web Community (KWC) on 13/02/2012

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு வாசகர்கள் அனைவருக்கும். உங்கள் அபிமான இணையத்தளமான காத்தான்குடி இன்போ வெற்றிகரமாக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதை வாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள், அல்ஹம்துலில்லாஹ்.

கடந்த டிசம்பர் மாதம் காத்தான்குடி இன்போ மொத்த வருகைகளாக 301,511 வருகைகளைப் பெற்றிருந்தது. இது எமது இணையத்தளம் இயங்கத் தொடங்கிய காலத்திலிருந்து பெறப்பட்ட மாதமொன்றுக்கான இரண்டாவது அதிகூடிய மொத்த வருகைகளாகும்.

மாத்திரமன்றி கடந்த டிசம்பர் 26ம் திகதி மாத்திரம் 49,880 மொத்த வருகைகள் பதியப்பட்டன. பிராந்திய இணையத்தளம் ஒன்று இவ்வாறான அதிக வருகைகளை ஒரே தினத்தில் பெற்றது அதிசயமாகவே ஊடக வட்டங்களில் பார்க்கப்படுகின்றது.

2011ம் ஆண்டில் இன்போ 2,722 பதிவுகளை வெளியிட்டிருந்தது இது அவ்வாண்டு இறுதியில் எமது மொத்த பதிப்புகளான 5,839 பதிவுகளின் 46 சதவீதத்துக்கும் அதிகமாகும்.

வெளிநாட்டிலும் வெளியூர்களிலும் வசிக்கும் எமதூர் சகோதர சகோதரிகளுக்கு உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளை வழங்குவதும் எமதூருக்கும், பிரதேசத்துக்கும், சமூகத்துக்குமான ஊடக இடைவெளியை நிரப்புவதும் இவ்விணையத்தளத்தை ஆரம்பிக்கும் போது எமது பிரதான நோக்கங்களாக இருந்தன. இறைவனின் உதவியால் அந்நோக்கங்கள் குறிப்பிடத்தக்களவு அடையப்பட்டுள்ளன.

எமது பிரதேச செய்தியாளர்கள் மற்றும் வாசகர் ஆக்கங்கள் ஆகியவற்றுக்கு களம் அமைத்துக் கொடுத்ததில் இன்போவின் பணி அளப்பரியது என எமதூர் புத்திஜீவிகள் பலர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது வருடத்துக்குள் நகர்ந்திருக்கும் எமது இணையத்தளம் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வுகள், கலந்துரையாடல்கள் அடிப்படையில் செய்திகள் மற்றும் வாசகர் ஆக்கங்களை பிரசுரத்திற்காகக் கோருவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வாசகர் ஆக்கங்களைப் பொறுத்தவரை, வாசகர்கள் நேரடியாகவே எமது மின்னஞ்சல் முகவரியான kattankudi@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம். ஏற்கெனவே ஆக்கங்களை அனுப்பாத வாசகர்கள் அடையாளப்படுத்தும் தேவைக்காக தமது முழுப்பெயர், முகவரி, தொடர்புகொள்ளக் கூடிய தொலைபேசி எண் மற்றும் ஆக்கத்தில் வெளியிடப்பட வேண்டிய பெயர் (புனைப்பெயர் ஏதும் இருப்பின்) ஆகியவற்றையும் குறிப்பிட்டு அனுப்பி வைக்க வேண்டும். இந்த விபரங்களின் ரகசியத்தன்மை பேணப்படும் என்பதுடன், எக்காரணம் கொண்டும் நிர்வாகம் சாராத யாருக்கும் இத்தகவல்கள் வழங்கப்படமாட்டாது என்பதற்கான பொறுப்பை எமது நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும்.

One Response to “காத்தான்குடி இன்போ செய்திகள் மற்றும் வாசகர் ஆக்கங்களைக் கோருகிறது”

  1. junaid.m.fahath said

    jasakallahukiran.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s