காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

SLMDI மற்றும் பிரித்தானியாவின் தேம்ஸ் பௌத்த விகாராதிபதி சந்திப்பு

Posted by Kattankudi Web Community on 12/02/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்
இலங்கை முஸ்லிம் புலம் பெயர்ந்தோர் அமைப்பு உறுப்பினர்கள் இன்று 11/02/2012 சனிக்கிழமை பிரித்தானியாவில் அமைந்துள்ள தேம்ஸ் பௌத்த விகாரைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டனர்.
மேற்படி விஜயத்தின் போது SLMDI இன் தலைவர் M.L நசீர் உட்பட அதன் உறுப்பினர்களான S.M.இஸ்ஸதீன், J.A.கபீர், M.J.M.ஜெம்சீத், A.L.M.மபாஸ், K.I.இர்சாத் மற்றும் A.இஸ்ஸதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
  .
மேற்படி சந்திப்பின் போது தேம்ஸ் பௌத்த விகாராதிபதி சங்கைக்குரிய பகலகம சோமரத்ன தேரருக்கும் SLMDI இன் உறுப்பினர்களுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது .
இதன் போது உறுப்பினர்களால் தமது அமைப்பு பற்றிய அறிமுகம் மற்றும் அதன் குறிக்கோள்கள் தொடர்பில் விகாராதிபதி அவர்களுக்கு தெளிவுபடுத்தபட்டதோடு பிரித்தானியாவில் வாழும் சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஊக்குவிக்கும் செயற்பாடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
இதன் போது கருத்து தெரிவித்த விகாராதிபதி சங்கைக்குரிய பகலகம சோமரத்ன தேரர் அவர்கள் தனது 34 வருட அனுபவத்தில் தமது தாய் நாடு தொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய முதலாவது அமைப்பு SLMDI என குறிப்பிட்டதோடு இன,மத பேதங்களுக்கு அப்பால் நாம் இலங்கையர் என்ற ரீதியில் அதன் கல்வி,பண்பாடு மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.
அத்துடன் இலங்கையின் இறைமையை பாதுகாப்பதை ஒரே நோக்காக கொண்டு எமது தாய் நாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலான அந்நிய சக்திகளின் முயற்சிகளுக்கு எதிரான பிரசாரங்களில் ஈடுபடுவது தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s