காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி இழுத்துச் செல்லப்பட்டார் (காணொளி இணைப்பு)

Posted by Kattankudi Web Community on 11/02/2012

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு வீதி  ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்டுள்ளனர். கீழே விழுந்த முன்னாள் ஜனாதிபதி நஷீட் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்டமை அவரின் ஆதரவாளர்களின் ஆர்பாட்டத்தை அதிகரிக்க செய்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு இழுத்து செல்லப்படும் கட்சிகள் வெளியானவுடன் . அவரின் ஆதரவு வட்டம் அதிகரித்துள்ளதாக டிவிட்டர் செய்திகள் தெரிவிக்கின்றது . மாலைதீவு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டின் மனைவியும் மகள்களும்  கொழும்பை வந்தடைந்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பேச்சாளர் பந்துல ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த 1988ம் ஆண்டு காலப்குதியில் சீனாவின் பக்கம் மாலைதீவு போகாது இருக்கவும் அந்த நாட்டை இந்தியா தனது மறைமுக கட்டுபாட்டில் வைத்துக்கவும் இலங்கையை சேர்ந்த தமிழ் ஆயுத அமைப்பான புளட் என்ற ஆயுத குழுவை பயன்படுத்தி மாலத்தீவில் புரட்சியில் ஈடுபட்டது என்ற குற்றசாட்டுக்கள் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் மாலைதீவின் தற்போதைய நிலை தொடர்பாக பேசியுள்ள இந்திய வெளிநாட்டு அமைச்சர் மாலைதீவின் உள்ளநாட்டு பிரச்சினையில் இந்தியா தலையிடாது என்று தெரிவித்துள்ளார் .

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டை கைதுசெய்யுமாறு அந்நாட்டு குற்றவியல் நீதிமன்றமொன்று உத்தரவிட்டதை தொடர்ந்து ஒரு வீதி  ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஒரு வர்த்தக நிலையத்தில் மறைந்திருந்த அவரும் அவரின் ஆதரவாளர்களும் இராணுவத்தால் இழுத்து செல்லப்பட்ட  நஷீட்டை  பின்னர் விடுவிக்கப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மொஹமட் நஷீட் மீதும் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் கூறப்படுகிறது.

அதேவேளை மொஹமட் நஷீட்க்கு எதிராக குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. என்றாலும் அவர் கைது செய்யப்படமாட்டாரென புதிய ஜனாதிபதியின் பேச்சாளர் கூறியதாக தெரிவிக்கப்படுகின்றது. மற்றுமொரு தகவலில் படி மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்யுமாறு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை தற்காலிகமாக இரத்துசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கின்றது.

மொஹமட் நஷீட் மற்றும் அவரின் முக்கிய ஆதரவாளர்கள் மிக கடுமையாக தாக்கப்பட்டதாக டிவிட்டர் மற்றும் முகப்பு நூல் பக்கங்களில் அவரின் ஆதரவாளர்கள் தகவல் வெளியிட்டு வருகின்றனர்

நன்றி-லங்கா முஸ்லிம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s