காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் Crawley நகருக்கு விஜயம்

Posted by Kattankudi Web Community on 11/02/2012

எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ்

கடந்த 02/02/2012 வியாழக்கிழமை  இலங்கை முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் (SLMDI) உறுப்பினர்களுக்கும் பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஸ் நொநீஸ் அவர்களுக்குமிடையில் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது SLMDI விடுத்த அழைப்பினை ஏற்று நேற்று  10-02-2012 வெள்ளிகிழமை Crawley நகருக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

SLMDI இன் தலைவர் ML. நசீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி உயர்ஸ்தானிகர் லினகல மற்றும் உயர்ஸ்தானிகர் அலுவலக உத்தியோகத்தர் எம்.இஸ்மாயீல் மற்றும் SLMDI இன் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

SLMDI உறுப்பினர் MJM.ஜெம்சீத் அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து சிறப்புரையாற்றிய அஷ்ஷெய்க் M.ரபீக் நளீமி அவர்கள் இலங்கை  முஸ்லிம் புலம்பெயர் அமைப்பு பற்றிய அறிமுகத்தையும் பிரித்தானியாவில் புலம்பெயர் முஸ்லிம்களின் வாழ்வொழுங்கு பற்றியும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியான டாக்டர் கிரிஸ் நொநீஸ் அவர்கள் தனது உரையின் போது இலங்கையின் புலம் பெயர் மக்கள் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துடன் கொண்டிருக்க வேண்டிய தொடர்பு பற்றி குறிப்பிட்ட அவர் புதியதோர் அபிவிருத்தி பாதையில் பயணிக்கின்ற இலங்கைக்கு புலம்பெயர் இலங்கையர் என்ற ரீதியில் ஆற்றப்பட வேண்டிய பங்களிப்புகள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.

மேலும் தனதுரையில் இப்போதிருக்கின்ற சர்வதேச சூழலில் இலங்கை முஸ்லிம் புலம்பெயர் அமைப்பானது காலத்தின் தேவை எனவும் குறிப்பிட்ட அவர் SLMDI இன் சேவைகளை பாராட்டியதுடன் அதற்க்கு உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் ஊடாக முழுப் பங்களிப்பினையும் வழங்க முடியும் என்றும் தெரிவித்தார்.

இவ்வாறான சந்திப்புகளை தொடர்ந்து மேற்கொள்ள தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும் எதிர்வரும் காலங்களில் பிரித்தானியாவில் பல்வேறு இடங்களில் நடை பெறுகின்ற ஜூம்மாக்களில் கலந்து கொள்ள SLMDI சார்பில் ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுகொண்டார்.

இறுதியில் SLMDI உறுப்பினர் செய்யத் இஸ்ஸதீன் அவர்களின் நன்றி உரையில் இவ்வமைப்பானது ஒரு அரசியல் சார்ந்த அமைப்பல்ல என்றும் குறிப்பிட்ட அவர்,  புலம்பெயர் முஸ்லிம்கள் தாய் நாட்டின் மீது கூடிய அக்கறையினையும் பற்றினையும் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இந்நிகழ்வின் போது உயர்ஸ்தானிகர், பிரதி உயர்ஸ்தானிகர் மற்றும் SLMDI உறுப்பினர்களுக்கும் இடையில் விரிவான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s