சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பினால் பாலர் பாடசாலைக்கு தளபாடம் கையளிப்பு
Posted by Kattankudi Web Community on 11/02/2012
சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் (OSA-SRILANKA) தலைவர் இல்மி அஹமட் லெவ்வை ஜே.பி. அவர்களினால் அமைப்பினது கல்வி எழுட்சித்திட்டம் 2012 இன் இரண்டாவது நிகழ்வாக பின் தங்கிய காங்கேனோடை இக்ராஹ் முன் பள்ளிப் பாடசாலைக் கட்டடத்திற்கு நிறப்பூச்சு செய்து(PAINT) தளர்பாடங்களும் கடந்த 10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் பாலர் பாடசாலை நிருவாகத்திடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அமைப்பினது பதில் செயலாளர் மௌலவி ஏ.சீ.எச்.எம்.பௌசுல் அமீன் JP (ஜமாலி), பொருளாளர் எம்.எம்.எம்.தாஹிர் JP, எம்.எம்.ஆதம் பாவா (ISA) ஓய்வு பெற்ற ஆசிரிய ஆலோசகர், மற்றும் காங்கேனோடை பெரிய ஜூம்ஆப் பள்ளிவாயல் நிருவாகிகளும், ஊர் முக்கியஸ்தர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தார்கள் .
This slideshow requires JavaScript.







