சமுர்த்தி பயனாளிகளுக்கான சிகிச்சை கொடுப்பனவு 200 நூறு ரூபாவாக அதிகரிப்பு
Posted by Kattankudi Web Community on 11/02/2012
வைத்திய சாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் சமுர்த்தி பயனாளிகளுக்கான சிகிச்சை கொடுப்பனவு நாளொன்றுக்கு 200 நூறு ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் பி.குணரட்னம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பிரதேச செயலகங்களுக்கும் சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளார்.
இந்த சுற்றறிக்கை அறிவித்தல் கடந்த புதன்கிழமை (8.2.2012) சகல பிரதேச செயலகங்களுக்கும் அனுப்பப்பட்டள்ளது.
இந்த சமூக காப்புரித்து கொடுப்பனவில் சமுர்த்தி பயனாளியொருவர் அரசாங்க வைத்தியசாலையில் தங்கியிருந்து ஏழு நாட்களுக்கு சிகிச்சை பெற்றிருந்தால் அவருக்கு நாளொன்றுக்கு 100 ரூபா ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது.
தற்போது இந்த கொடுப்பனவு நாளொன்றுக்கு 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமுர்த்தி பயணாளிகளுக்கு சமுர்த்தி சமூக காப்புரித்தாக மரணக்கொடுப்பனவு ரூபா 5000 மற்றும் திருமணக் கொடுப்பனவு 3000 ரூபாவும், குழந்தை பிறப்புக்கு 5000 ரூபாவும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.







