மௌலவிமார்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
Posted by Kattankudi Web Community on 09/02/2012
மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியின் பின்னர் தொழில்சார் கற்கை நெறிகளை வழங்கி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் வாய்ப்புக்களைப் பெறுவதை உறுதிப்படுத்தும் காத்தான்குடி கபுறடி வீதியில் இயங்கி வரும் the acaddemy (த அகடமி) கல்வி நிறுவனத்தினால், மௌலவிமார்களுக்கான இலவச தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இக்கருத்தரங்கில் மத்திய கிழக்கு நாடுகளில் மௌலவிமார்கள் தொழில் வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்ளும் வகையில் வழிகாட்டல்கள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இந்நிகழ்வில் மெலளவி பட்டம் பெற்ற தொழில் வாய்ப்பை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கும் அல்லது தங்களது தொழிற்துறையை மேம்படுத்த விரும்பும் அனைத்து மெலளவிமார்களும் கலந்து பயன்பெறமுடியும்.
இக்கருத்தரங்கு பின்வரும் விபரப்படி நடைபெறும்,
திகதி: 10.02.2012 (வெள்ளிக்கிழமை)
நேரம்: பி.ப 3:45 மணி தொடக்கம் 6:00 மணி வரை
இடம்: காத்தான்குடி அன்வர் வித்தியாலயம் (காத்தான்குடி மத்திய கல்லூரிக்கு அருகாமையில்)
தகவல்:
தொழில் வழிகாட்டல் பிரிவு
த அகடமி கல்வி நிறுவனம்
காத்தான்குடி.







Kuraish said
WELL DONE MAAHIR.
nanayam said
going to be a good opportunity for moulavies.