ஏறாவூர் கோட்ட மட்டத்தில் கல்வியில் புலமை காட்டிய மாணவர்களுக்கு விருது
Posted by Kattankudi Web Community on 05/02/2012
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பிரிவின் ஏறாவூர் கோட்ட மட்டத்தில் கல்வியில் அதிகூடிய புலமை காட்டிய மாணவர்களைப் பாராட்டிக் கௌரவித்து பரிசுகள் வழங்கும் நிகழ்வு ஏறாவூர் அறபா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 62 மாணவர்களும், க.பொ.த.சாதாரண தரத்தில் 9 ஏ தர சித்திகளைப் பெற்றோரும், பல்கலைக்கழக அனுமதி பெற்ற மாணவர்களும் பாராட்டி பரிசளிக்கப்பட்டனர்.
ஏறாவூர் தௌஹீத் ஜமாஅத் அமைப்பு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப் பணிப்பாளர் யூ.எல்.எம் ஜெய்னுதீன் உட்பட ஏறாவூர் கோட்டக் கல்வி வலயத்தின் சகல பாடசாலை அதிபர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். தௌஹீத் ஜமா அத் அமைப்பின் செயலாளர் ஏ. முஹைதீன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
This slideshow requires JavaScript.








mmsa said
Ma Sa Allah