பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு
Posted by Kattankudi Web Community (KWC) on 04/02/2012
காத்தான்குடி இஸ்லாமிக் சென்றர் பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கான இஸ்லாமிய மார்க்க விளக்க நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் ஞாயிற்றுக்கிழமை (05.02.2012) பி.ப. 4.00 மணி முதல் 5.30 மணிவரை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் “இஸ்லாமிய குடும்ப அமைப்பு” எனும் தலைப்பில் கொழும்பு அல்குத்ஸ் சர்வதேச பாடசாலையின் அதிபர் மௌலவியா உம்மு றீமா மற்றும், உப அதிபர் மௌலவியா றிஸாதா றஷீத் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வில் அனைத்து சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஜம்இய்யதுந் நிஸா, இஸ்லாமிக் சென்றர் – காத்தான்குடி







mohammed nawfer said
massa allah eppadi oru penkal amaippu k.kudykku kattayam thevai.sukran.ummu mishal