காத்தான்குடி நகரசபை தவிசாளர் பொதுமக்களுக்கு விடுக்கும் அறிவித்தல்
Posted by Kattankudi Web Community on 04/02/2012
காத்தான்குடியிலுள்ள வீடுகளில் நாளாந்தம் சேரும் குப்பைகளை அகற்றுதல் தொடர்பாக காத்தான்குடி நகரசபை தவிசாளர் பொதுமக்களுக்கு விடுத்த அறிவித்தல் காத்தான்குடி இன்போவிற்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து அதனை வாசகர்களுக்காக தருகின்றோம்.

Like this:
Be the first to like this post.
This entry was posted on 04/02/2012 at 13:01 and is filed under Kattankudi News, Official Press Release.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed.
You can leave a response, or trackback from your own site.
Aliyar Mohideen said
ஊட்டு குப்பைகள எடுக்குறது சம்பந்தமா சில விசயங்கள சொல்லியிரிக்காக…
ரொம்ப நல்ல விசயம் மக்காள்…. நல்லாத்தான் இரிக்கி திட்டமெல்லாம்……
இத செய்யனுமென்டு எந்தஅளவுக்கு ஊக்கமா இரிந்தீங்களோ அதமாதிரி அதச் செய்யிறத்திலயும் ஊக்கமாவும் கண்ணுங் கருத்துமா இரிங்க…
ஏனென்டால் சில விசயங்கள் ‘உழுகுறவன் இழப்பமானா எரும மாடு மச்சான் முற கொண்டாடுமாம்’ எங்குற மாதிரி நடக்குறது நம்ம ஊரு வழம.
நம்ம ஊருல நெருக்கமான இந்த சூழ்நிலையில குப்பைகள நம்ம ஊட்ட உட்டு வெளியேத்தனும் எங்குறதுல அக்கற காட்டி சிலபேரு அடுத்தவனுக்கு ஆப்பு வச்சிகிட்டிரிக்காக ரொம்பவும் தந்திரமா…. நகர சபயா? கொக்கா எங்கற மாதிரி?
குப்ப கொட்டுற இடங்கள்ள பக்கதுல இரிக்கிறவக குப்ப கொட்டுறத விட எங்கேயோ இருந்து கறுப்பு பொக்ஸ் வேனுல வந்து குப்பய ரோட்டுல போட்டுட்டு போறாக நம்ம ஊரு புதுப் பணக்காரங்க சில பேரு?? ‘கங்கையில அமுங்குனாலும் காகம் அன்னமாகாதாம்….’
நாளைக்கு மறுமையில எவனையும் அல்லாஹ் விட்டு வைக்கமாட்டான்… படிக்காத பாமரங்க நல்லது செய்யிற நிலமையில, படிச்ச முட்டாளுங்க,ஸ்கூல் மாஸ்டர் மாருங்க (சில பேரு) பேசாம வந்து சைக்கிள்ல கண்ண மூக்க பாத்து ரோட்டுல குப்ப போடக்குள்ள பொலிசு வந்து கையும் மெய்யுமா புடிச்சுட்டுப் போறத போட்டோ எடுத்து பப்ளிகில்ல போடனும்..
அப்பதான் புத்தி வரும் படிச்சவன் பெயர கெடுக்குற சில முட்டாளுகளுக்கு…
மக்காள் கோபிக்காதீங்க… எல்லாம் உரு ஆதங்கத்ல சொன்னதுதான்…
ரோட்டுல குப்ப கொட்டுறவகளுக்கு எதிரா இப்படியொரு விசயத்த செய்யப்போறம் என்டு ஜூம்மாவுல அறிவிச்ச புறவுதான் எனக்கு ஒரு சந்தோசம் வந்திச்சு…
தம்பி அஸ்பரு ஒரு முடிவெடுத்தா அத கட்டாயம் செய்வாரு என்ட நம்பிக்க எனக்கு இரிக்கி… கட்டாயம் செய்யனும் மக்காள்..
இதுக்கு நம்ம ஊரு சனங்க நல்ல வரவேற்பு கொடுப்பாங்க இந்த குப்ப கொட்டுற முட்டாளுகளத்தவிர…
நம்ம ஊரு தலம பொறுப்ப இந்த நகர சபகிட்ட கொடுத்திரிக்கி… இந்த குப்ப எடுக்குறத நல்ல திட்டமா ஆரம்பிச்சிரிக்கீக..
நல்லாச் செய்திருங்க மக்காள்… இப்போ செய்யிறவன விட, செய்றவன விமர்சனம் பண்ணுறவனுகள் கொள்ளயா இரிக்கானுவள்… அதுக்கு அசந்து போயிறாதீங்க ஜாக்கிரத…
- அலியாரு மொயிதீன்
- காத்தான்குடி