சிறுநீரகம் பாதிக்கப்பட்ட எமது சகோதரருக்கு உதவுவோம்
Posted by Kattankudi Web Community on 02/02/2012
கடந்த 1993ஆம் ஆண்டு கத்தார் நாட்டில் வைத்து புனித இஸ்லாத்தை தழுவி, அதனைத்தொடர்ந்து 1997ஆம் ஆண்டு புதிய காத்தான்குடியைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் முடித்து புதிய காத்தான்குடி பதுரியா மஹல்லாவில் வசித்து வரும் எஸ்.எம்.றிபாஸ் என்பவர் தனது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு மிக அவசரமாக சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்கு உள்ளாக வேண்டிய நிலையில் உள்ளார்.
கூலித்தொழில் செய்து வந்த இந்த சகோதரரின் அவசரமான சத்திரசிகிச்சைக்காக 12இலட்சம் ரூபா தேவைப்படும் என இவரது வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இவரது மனைவி மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மகரகம வைத்தியசாலையில் சத்திர சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இவரது சிறுநீரக தேவையை கருத்திற்கொண்டு இவரது மனைவி தனது சிறுநீரகங்களில் ஒன்றை தனது கணவனுக்கு வழங்க முன்வந்திருக்கின்றார்.
இவ்வாறான ஒருநிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக தேவைப்படும் 12இலட்சம் ரூபா பணத்தினை திரட்டுகின்ற பட்சத்தில் இவரது சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சையினை விரைவில் செய்து இந்த சகோதரரின் உயிரை காக்க முடியும்.
எனவே, இவருக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு காத்தான்குடி இன்போ தனது வாசகர்களை வேண்டிக்கொள்வதோடு இவரது விரைவான சுகத்திற்காக எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றது.
இவர் தொடர்பிலான வைத்திய அறிக்கைகள், உறுதிப்படுத்தல் கடிதங்கள் மற்றும் இவருக்கான உதவிகள் வந்து சேரவேண்டிய இவரது மனைவியின் வங்கிக் கணக்கிலக்கம் போன்றவை கீழே வழங்கப்படுகின்றது.
BANK ACCOUNT DETAILS
A/C NO – 2966103
KL.RAZEENA BIVI
BANK OF CEYLON-KATTANKUDY
ஆவணங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.













mohammed nawfer said
“allah kareem”
zarook said
pls ur kattankudi office addres sent me avasaramaka nan neril news onru tharukiran
Kattankudi Web Community (KWC) said
Dear Zarook,
We do not have an office. Communicate through our email: kattankudi@yahoo.com
WebAdmin
NAWSATH said
dear info……please provide his mobile no