காணாமல் போன இளைஞர்: தாய் உதவி கோருகிறார்
Posted by Kattankudi Web Community (KWC) on 02/02/2012
காத்தான்குடி கர்பலா கிராமத்தில் வசித்துவரும் தௌபீக் முகம்மது இஸ்மாயில் (வயது 22,) என்பவர் கடந்த ஒருமாதமாக காணாமல் போயுள்ளார்.
இவர் ஒரு வலது குறைந்தவர், இவர் ஒரிரு வார்த்தைகள் மாத்திரமே பேசக் கூடியவர். பிரதேசத்தை அவரிடம் வினவினால் வெலிகம எனவும் அல்லது கொழும்பு எனவும் இவர் கூறுவார் காத்தான்குடி என்று சொல்ல இவருக்கு தெரியாது என இவரது தாயார் கூறுகின்றார்.
கடைசியாக காணப்பட்ட போது வெள்ளையில் நீல பெட்டி போட்ட சேட்டும். நீல நிற நீளக்காற்சட்டையும் அணிந்திருந்தார். இவர் பொது நிறமுடையவர்.
இவரைக் கண்ட அல்லது இவர் தொடர்பான விபரங்கள் அறிந்த யாரும் இருப்பின், பின்வரும் தொலைபேசி இலக்கங்களிற்கு அறியத்தருமாறு அவரது தாயார் காத்தான்குடி இன்போவினூடாக அறிவித்துள்ளார்.
தொலைபேசி இலக்கங்கள்: 077 466 8901 மற்றும் 077 514 0892







