தாருல் ஹைர் நிறுவனத்தின் ஐந்து வருடபூர்த்தியும் கல்வி வழிகாட்டலும் (Updated)
Posted by Kattankudi Web Community (KWC) on 01/02/2012
உயர்தரக் கல்வி வழிகாட்டலும் பெற்றேர்களுடனான சந்திப்பும்
காத்தான்குடியை மையமாகக் கொண்டு இயங்கும் தாருல் ஹைர் நிறுவனம் தனது ஐந்து ஆண்டுகால நிறைவையொட்டி 2011ம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர்தரக் கல்வி வழிகாட்டல்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது.
அத்துடன், அவர்களதும் தற்போது கணித விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களினதும் பெற்றோரை சந்திக்கும் வருடாந்த கூட்டமும் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்வு இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 03.02.2012 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.30 மணிக்கு ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் சகல மாணவர்களையும் தங்களது பெற்றோர் சகிதம் சமூகமளிக்குமாறு தாருல் ஹைர் நிருவாகம் பணிவுடன் கேட்டுக் கொள்கிறது.
தலைமை: ஜனாப். ACM. சுஹூதி (தலைவர், தாருள்ஹைர், காத்தான்குடி.)
அதிதிகள்:
ஜனாப். SHM. அஸ்பர் (கௌரவ தவிசாளர், காத்தான்குடி நகர சபை)
ஜனாப். ULA. முபாரக் (அதிபர், காத்தான்குடி மத்திய கல்லூரி)
ஜனாப். MM. இஸ்மாலெப்பை (அதிபர், மீரா பாலிகா மகா வித்தியாலயம், காத்தான்குடி)
ஜனாப். YBA. கபூர் (B.Sc) (உயிரியல் பாட ஆசிரியர், காத்தான்குடி மத்திய கல்லூரி)
ஜனாப். MMM. நௌபர் (B.Sc) (இரசாயனவியல் பாட ஆசிரியர், காத்தான்குடி மத்திய கல்லூரி)
திரு. N. ஜோதிராஜா (B.Sc) (பௌதிகவியல் ஆசிரியர், காத்தான்குடி மத்திய கல்லூரி)
ஜனாப். AGM. ஹாறூன் (நகரசபை உறுப்பினர்)
நிகழ்வுகள்:
கிராஅத்
வரேவேற்புரை
தலைமை உரை
விசேட உரை
பெற்றோர்களுடனான கலந்துரையாடல்
மாணவர்களுடனான கலந்துரையாடல்
நன்றியுரை






