மட்டக்களப்பில் தாதியர் ஆர்ப்பாட்டம்
Posted by Kattankudi Web Community (KWC) on 31/01/2012
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதியர்கள் இன்று நண்பகல் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இன்று நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான போராட்டம் சில மணிநேரங்கள் தொடர்ந்தது. இதனால் வைத்தியசாலை பணிகள் சீர்குலைந்தன.
வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்திற’கு முன்னால் திரண்ட பெருமளவிலான தாதியர்கள் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளிலான பதாதைகளை ஏந்’தியவண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சீருடைகொடுப்பனவு அதிகரிப்பு உட்பட 15 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் நடாத்தப்பட்டதாக தாதியர்கள் தெரிவித்தனர்.
This slideshow requires JavaScript.







