காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களுக்காக நோர்வே தொடர்ந்து உதவி வழங்கும்: சரீரம் நிறுவன விழாவில் நோர்வே தூதுவர்

- நமது செய்தியாளர் -

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் சமூக பொருளதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்த நோர்வோ நாடு தொடர்ந்து இலங்கைக்கு உதவிகளை வழங்கும் என இலங்கையிலுள்ள நோர்வே நாட்டுத்தூதுவர் ஹில்ட் ஹரல்ஸ்ட்டட் தெரிவித்தார்.

மட்டக்களப்பு தாழங்குடா சரீரம் சிறிலங்கா நிறுவனத்தின் 22வது ஆண்டு நிறைவு விழா (24.1.2012)நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நோர்வே தூதுவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுவரை காலமும் இலங்கை அரசாங்கத்தடனும் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் உள் நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களினுடாகவும் பல் வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் வாழ்வாதார மேம்பாட்டு வேலைகளையும் நோர்வே மேற்கொண்டு வந்தது.

இதே போன்று தொடர்ந்து இப்பகுதிகளில் மக்களின் சமூக பொருளதார அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ள நோர்வே தயாராக இருக்கின்றது.

இதில் வறுமை ஒழிப்பு திறனாய்வு மக்களின் திறன், சமூக அபிவிருத்தி போன்ற வேலைத்திட்டங்கள் முக்கியமானவையாகும்.

நோர்வே 1994ம் ஆண்டு தொடக்கம் இந்த சரீரம் நிறுவனத்துடன் இணைந்து வேலை செய்து வருகின்றது. இங்கு ஏற்பட்ட யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தம் என்பவற்றின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த சரீரம் நிறுவனத்தினூடாக உதவிகளை வழங்கியதுடன் வாழ்வாதார உதவிகளையும் இந்த நிறுவனத்தினூடாக மேற்கொண்டோம்.

எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வுள்ளோம்.

கடந்த வெள்ள அனர்த்தத்தின் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்தோம்.

இந்த உதவிகள் சரீரம் நிறுவனத்தின் ஊடாக மேற்கொண்டோம். நோர்வே வேறு விதமான வேலைத்தட்டங்களையே மெற்கொள்ளும்.

அந்த வகையில் சமூக பொருளாதார வேலைத்திட்டத்தினை மேற்கொள்வது முக்கியமாகும்.

ஆயிரக்கணக்கான குடும்பங்களை சரீரம் நிறுவனம் இணைத்து அவர்களின் சுய தொழிலை மேம்படுத்தி அவர்களுக்காக உதவிவருகின்றது.

பல பெண்களை இத்திட்டத்தில் சரீரம் நிறுவனம் இணைத்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது.

80வீதம் பெண்கள் சரீரம் நிறுவனத்தில் இணைந்து பயணாளிகளாக உள்ளனர் என்பதையறிந்து நான் மிகவும் மகிழ்சியடைகின்றேன்.

நோர்வே அரசு இலங்கை அரசுடன் ஒன்றிணைந்து பல தரப்பு வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளது.

வறிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களின் சுபீட்சத்தை கட்டியெழுப்ப தொடர்ந்து வேலைகளை மேற்கொள்வோம்.

இந்த சரீரம் நிறுவனத்தின் 22வது ஆண்டு விழாவில் எனது நோர்வே நாட்டு அரசாங்கத்தின் சார்பிலும் அந்த நாட்டு மக்கள் சார்பிலும் கலந்து கொள்வதால் இந்த நிறுவனத்திற்கு எனது வாழ்த்தக்களை தெரிவித்துக்கொள்கின்றேன் என அவர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இதன் போது நோர்வே தூதுவரை சரீரம் நிறுவனத்தின் தலைவர் ஏ.லோகேஸ்பரன் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் அவருக்கு நினைவுச்சின்னமும் வழங்கி வைத்தார்.

சரீரம் நிறுவனத்தின் தலைவர் ஆறுமுகம் லோகேஸ்பரன் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா துரை ரட்ணம் உட்பட பலரும் உரையாற்றியதுடன் காத்தான்குடி நகரசபையின் முன்னாள் தலைவர் மர்சூக் அகமட் லெவ்வையும் கலந்து கொண்டார்.

இதன் போது சரீரம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர்.

This slideshow requires JavaScript.

Advertisement

Filed under: Batticaloa, News

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Info SMS

  • UN manitha urimaikal mahanattil arasin sarfil kalanthkolla DM Hizbullah inru iravu Genewa payanam (j) 1 day ago
  • Pirathi amaichar Hizbullah vin vendukolukku innanga kattankudy Base hospitlil ICU amaikka suhathara amaichu 6 million nethi othukkeedu (j) 3 days ago
  • 20.02.2012 Naalai Kaalai 9.00 Manikku Sammelanam, Jammiyathul Ulama Edpaaddil "Vaddi Olippu Maanaadu" Nadaiperavullathu. 5 days ago
  • Kattankudi info vin kouravam- kavimani MHM.Buhari falaahi avarhalin sirappup peddi. Visit http://t.co/ikXGbcUY 1 week ago
  • Post of Auditor from State Printing coperation ( Basic salary 25465/-& Gov.Allow.) please see the page #107 sunday observer on 12-02-2012 1 week ago

User Online

web stats

RSS காத்தான்குடி செய்திகள்

முந்தைய பதிவுகள்

புதிய பதிவுகள் தொடர்பில் மின்னஞ்சல் அறிவித்தல்களைப் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பதிவு செய்யுங்கள்

Join 473 other followers

பிரபல பதிவுகள்