மட்டக்களப்பு மாவட்டத்தில் சமுர்த்தி வங்கிகளை கணணி மயப்படுத்தும் வேலைத்திட்டம் இன்று (24.1.2012) மாலை வாழைச்சேனையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் லக்ஸமன் யாப்பா அபேவர்த்தன வாழைச்சேனை சமுர்த்தி வங்கியில் கணணி மயப்படுத்தும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இந்த வைபவத்தில் சமுர்த்தி அதிகார சபையின் வாழ்வாதார இணைப்பாளர் எம்.நடேசராசா மட்டக்களப்பு மாவட்ட பிரதி பணிப்பாளர் பி.குணரட்னம், உட்பட சமர்த்தி அதிகார சபையின் வங்கி நடவடிக்கைக்கான முகாமையாளர் மற்றும் முகாமையாளர்கள் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
இதன் போது சமுர்த்தி பயணாளியொருவருக்கு வாழ்வாதாரத்திட்டத்தின் கீழ் முற்சக்கர வண்டியொன்று கடன் திட்டத்தின் கீழ் அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டன.
This slideshow requires JavaScript.
Filed under: News










