தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 25 வருட பூர்த்தியினை முன்னிட்டு அதன் சேவைகள் தொடர்பாக இளைஞர் சமுகத்திற்கும் மக்களுக்கும் விழிப்பூட்டல் செய்யப்பட்டு வருகின்றது.
இதற்கமைய நாடளாவிய ரீதியில் 332 பிரதேச செயலக பிரிவுகளில் வீடில்லாத இளைஞன் யுவதிக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் புதிய காத்தான்குடியில் அமைக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு இன்று ?(24.01.2012) இடம்பெற்றது.
இளைஞர் சேவை உத்தியோகத்தர் எம்.ஐ.றம்சி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் எம். கபூர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஈ.கருணாகரன் மற்றும் சம்மேளன பிரதி செயலாளர் ஏ.எம்.சாதிகீன், எச்.எம்.பிர்தௌஸ் ஆசிரியர், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.நிப்றாஸ், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஒரு லட்சம் ரூபா நிதியினைக் கொண்டும் தனவந்தர்கள் மற்றும் அமைப்புக்களின் நிதியுதவிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட இவ்வீட்டிற்கு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனமும் ஐம்பதாயிரம் ரூபா நிதியினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
This slideshow requires JavaScript.
Filed under: Kattankudi News










