காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

Posted by Kattankudi Web Community (KWC) on 20/01/2012

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் ஆகியன இணைந்து  சர்ச்சைக்குரிய வியாபார முறை குளோபல் நெட்வேக் மார்கடிங் (Global Network Marketing) தொடர்பாக பொது மக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்.

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹூ

மேற்படி விடயம் தொடர்பாக கடந்த 14.01.2012 சனிக்கிழமை காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா காரியாலயத்தில் இடம்பெற்ற காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனப் கௌரவப் பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் கௌரவ உலமாக்கள் மற்றும் மேற்படி வியாபாரத்தில் ஈடுபடும் சகோதரர்கள் ஆகியோர் கலந்து கொண்ட முக்கிய கலந்துரையாடலின்போது பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

01. Global Network Marketing வியாபார முறையில் உலமாக்களுக்கும் புத்திஜீவிகளுக்கும் மிகுந்த சந்தேகம் இருக்கின்ற காரணத்தினால் எமது ஊரில், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினுடைய மார்க்கத்தீர்ப்பு கிடைக்கும் வரை உடனடியாக பொதுமக்களும், இவ்வியாபாரத்தில் ஈடுபடும் சகோதரர்களும் ஈடுபடாது தவிர்ந்து கொள்ளவேண்டுமென தீர்மானிக்கப்பட்டது.

02.    அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாவை ஆறு மாத காலத்திற்குள் பெறுவதெனவும் அவர்களின் பத்வாவிற்கேற்ப எதிர்காலத்தில் நடந்து கொள்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆகவே பொதுமக்கள் மேற்குறித்த சர்ச்சைக்குரிய வியாபாரத்தில் எதிர்வரும் ஆறுமாத காலத்திற்கு ஈடுபடுவதை முற்றாக தவிர்த்துக் கொள்ளுமாறு அன்பாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.

இவ்வண்ணம்,
தலைவர் / செயலாளர் – ஜம்இய்யதுல் உலமா,
பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,
காத்தான்குடி.

5 Responses to “காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்”

  1. முகம்மத் ஷா said

    Global Network Marketing.. what is this ? any body explain me about that?

  2. asfar said

    Global Network Marketing.. what is this ?

  3. mmmazlam said

    Global Network Marketing.. what is this ? any body explain me about that?

  4. அஹ்மத் அஹ்ஸன் said

    if u give me ur email ID i ll explain u in. allah

  5. this is my personal e mail address l contact
    ajabdul85@gmail.com

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s