குடும்பிமலை பிரதேசத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்
Posted by Kattankudi Web Community (KWC) on 17/01/2012
கிழக்கு மாகாணத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு குடும்பி மலைப் பிரதேசத்திற்கு நேற்று (16.01.2012) கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் விஜயம் செய்தார்.
அப்பிரதேச மக்களின் அழைப்பின் பேரில் சென்ற முதலமைச்சர் சந்திரகாந்தன் அங்குள்ள புராதன ஆலயங்களான பிள்ளையார் மற்றும் கண்ணகை அம்மன் ஆலயங்களையும் தரிசித்து குறித்த ஆலயங்களின் புனர்நிர்மாணத்திற்காக நிதி ஒதுக்கீடுகளையும் செய்துள்ளார்.
அத்தோடு அங்குள்ள மக்களின் முக்கிய தேவைகளான பாலர் பாடசாலை, விவசாய வீதி, பாடசாலை, விவசாய செய்கைகக்கான குளம் புணரமைப்பு (ஆத்திகாட்டுக்குளம்) மற்றும் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் என பல்வேறு அபிவிருத்திகளையும் உதவிகளையும் தாம் வழங்க உள்ளதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் அங்கு உரையாற்றும் போது தெரிவித்தார்.
This slideshow requires JavaScript.







