காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

பிறமதக் கலாச்சாரத்தை..

Posted by Kattankudi Web Community (KWC) on 15/01/2012

சேதப்படுத்தப்பட்ட விபுலானந்தர் சிலை-மதியன்பன்-

அடுத்தவ ரோடு சேர்ந்து
அமைதியாய் வாழும் உறவை
தடுத்திட வேண்டும் என்ற
தவறான சிந்தனைக்குள்
கடுப்புடன் வாழும் சிலரின்
காவாலித் தனமே – இந்த
நடு வீதிச் சிலை உடைப்பு
நாணித்தலை குனிய வேண்டும்.

மதியுடன் வானம் போல
மகிழ்வுடன் வாழும் – ஆரையம்
பதியுடன் காத்தான் குடியைப்
பகைத்திடச் செய்யும் இந்தச்
சதிகாரக் கும்பலுக்கு -
சரியான பாடம் சொல்ல
அதிகாரம் கொண்டோ ரோடு
அனைவரும் திரள வேண்டும்.

பிறமதக் கலாச் சாரத்தை
பேணியே வாழச் சொல்லும்
அறநெறிப் பாடம் தன்னை
அனைவரும் பேண வேண்டும்.
அறபெழுத் தென்றால் என்ன
அது சிலை என்றா லென்ன..
உறவிலே விரிசல் என்றால்
உடனதைக் களைய வேண்டும்.

அரசியல் லாபம் தேடி -
அதில் குளிர் காய எண்ணும்
குறுகிய எண்ணம் கொண்டோர்
குணத்தினை மாற்ற வேண்டும்.
பொறுமையைக் காத்த மக்கள்
போனது கனவென் றெண்ணி
இறுக்கமாய் உறவு தன்னை
இனிமேலும் பேண வேண்டும்.!

One Response to “பிறமதக் கலாச்சாரத்தை..”

  1. எப்ப நாம ஒத்துமையாக இருந்தம் பகை யொன்று புதிதாக உறுவெடுக்க???? குப்பை அகற்றி சுகாதாரமாக மனிதன் வாழ மனிதம் என்ற மனிதாபிமானம் இல்லாத இடத்தில் நமகென்ன வேலை இல்லாத பிரச்சினையை சிலை வடிவில் உறுவாக்கி இனி அதில் கைவைக்கபடும் காலமெல்லம் சந்தேகமும் பதற்றமும் வளரபோகும் இந்த செயலை எப்படி போற்ற உங்களுக்கு மனம் வருகிறது???

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s