மல்டி லெவல் மார்கடிங் (Multi Level Marketing) தொடர்பான விஷேட சொற்பொழிவும் கேள்வி பதில் நிகழ்ச்சியும்
Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2012
அன்மைக்காலமாக மல்டி லெவல் மார்கடிங் (Multi Level Marketing) என்ற பெயரில் எமதூரில் புதிய வியாபார முறையொன்று வேகமாகப் பரவி வருகின்றது.
இது பல சர்ச்சைகளையும் விமர்சனங்களையும் மக்கள் மத்தியில் உருவாக்கியிருப்பதால் இது தொடர்பாகத் தெளிவுபடுத்தும் விஷேட சொற்பொழிவொன்று இன்ஷா அல்லாஹ் 13.01.2012 (இன்று) வெள்ளிக்கிழமை இஷாத் தொழுகையினைத் தொடர்ந்து ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றனர்
இஸ்லாமிக் சென்றர் – காத்தான்குடி







fazil said
dear info
pls upload the speech
ithrees said
upload the speech pls……