பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு நிகழ்ச்சி
Posted by Kattankudi Web Community (KWC) on 13/01/2012
இன்ஷா அல்லாஹ் எதிர்வருகின்ற திங்கட்கிழமை (16.01.2012) பி.ப. 4.15 தொடக்கம் 5.30 மணிவரை பெண்களுக்கான விஷேட மார்க்கச் சொற்பொழிவு நிகழ்வொன்றினை ஜாமிஉத் தௌஹீத் பள்ளிவாயலில் நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அஷ்ஷெய்க் M.H. அப்துல் வதூத் ஜிப்ரி அவர்கள் கலந்து கொண்டு “இஸ்லாமியப் பெண்களின் உரிமைகளும் கடமைகளும்”எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளனர்.
எனவே பெண்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயன்பெற வருமாறு அன்புடன் அழைக்கின்றனர் ஜம்இய்யதுந் நிஸா பிரச்சாரப் பிரிவு, இஸ்லாமிக் சென்றர்






