காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

இருத்தினோம் இதயத்தில் உம்மை…

Posted by Kattankudi Web Community (KWC) on 11/01/2012

-மதியன்பன்-

இம்முறை நடைபெற்ற கல்விப்; பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி வெற்றி பெற்று பல்கலைக் கழகத்திற்குத் தெரிவான காத்தான்குடி மாணவர்களை வாழ்த்தி எழுதப்பட்ட கவிதை.

மருத்துவப் பீடம் செல்லும்
மாணவர் எழுவர் நீங்கள்
விருப்புடன் கல்வி கற்று
விடைதனில் ஜெயமும் பெற்று
குருத்தென வந்து இந்தக்
குலத்திற்கே பெருமை சேர்த்தீர்!
இருத்தினோம் உம்மை எங்கள்
இதயத்துள் என்றும் வாழ்க..!

பாலிகா தந்த முத்து
பாத்திமா சிபா எனும் சொத்து
தாஹினா, இர்பானா மற்றும்
தங்கையர் றிசாவுடன், றிகாசா
காவியம் கண்ட எங்கள்
கனிமொழி றிபாசா, சிதாரா
ஆகிய உம்மை நாங்கள்
அனைவரும் வாழ்த்து கின்றோம்.!

பொறியியல் வர்த்தகம் மற்றும்
பொறுப்புடன் கலைப ;பீடத்திற்கும்
தெரிவாகிச் செல்லும் எங்கள்
தேசிய கல்லூரி தந்த -
அரிதான சொத்து முப்பத்தி எட்டு
அனைவரும் ஜெயித்து வாழும்
உரிமையைப் பெற்றுக் கொண்டீர்
உளம் நிறை வாழ்த்துகின்றோம்

எங்களு}ர்ச் செல்வம் நீங்கள்
எழில் தரும் மாணவர் எல்லாம்
பொங்கிடும் அறிவு தன்னைப்
பொறுப்புடன் கற்று நாளை
திங்களாய் ஒளி வழங்கும்
தினத்தினைக் காண வேண்டும்
பங்கயம் போல நீங்கள்
பாரிலே ஜொலிக்க வேண்டும்.

வல்லவன் இறைவா ! நீயோ.
வளம் பெறும் அறிவு தன்னை
தொல்லைகள் ஏது மின்றி
தொடர்ந்திட உதவி செய்வாய்!
கல்வியில் உச்சம் கண்டு
கடமையில் வெற்றி காண
எல்லையோ இல்லா அருளை
என்றுமே இவர்களுக் கீவாய்..!

One Response to “இருத்தினோம் இதயத்தில் உம்மை…”

  1. MnFr said

    excuse me to bring your consideration, riza is boy student. not so as mentioned…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s