காத்தான்குடி.இன்போ

www.kattankudi.info

  • வருகைகள்

    • 5,016,290 மொத்த வருகைகள்

சிறுவனை அடையாளங்காண ஊடகங்களில் விளம்பரப்படுத்டுமாறு நீதிமன்றம் பணிப்பு

Posted by Kattankudi Web Community (KWC) on 10/01/2012

- நமது செய்தியாளர் -

15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் மட்டக்களப்பு நீதிமன்ற உத்தரவுப் படி சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் 5.1.2012 திகதியன்று ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இச்சிறுவன் தொடர்பான எதுவித தகவலையும் அவனால் தெரிவிக்கமுடியாதுள்ளதன் காரணமாக இச்சிறுவனை இனங்காண்பது தொடர்பில் இச்சிறுவனை  ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் குறித்து மாவட்ட நீதிபதியினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இச்சிறுவன் பற்றிய தகவல்கள் தெரிந்தவர்கள் மட்டக்களப்பிலுள்ள சிறுவர் நன்னடத்தை பராமிப்பு அலுவலத்திற்கு தெரியப்படுத்துமாறு அதன் மட்டக்களப்பு மாவட்ட நன்னடத்தை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

மாவட்ட சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தின் 065 222 2142 எனும் தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு தகவல் தெரிந்தோர் அறியப்படுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s